தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி) - THAMILKINGDOM தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி)

  இந்தியா - மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

  விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக யாருடனும் பேசாமல் ஒருவிதமான குழப்பமான மனநிலையோடு இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், நேற்று விக்னேஷின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் புளுவேல் விளையாட்டை விளையாடி யுள்ளார். 

  ஆட்டத்தின் முடிவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் விக்னேஷின் இடது கையில் நீலத் திமிங்கலத்தின் படம் வரைய ப்பட்டுள்ளது. Suicide Game எனப்படும் புளூவேல் விளையாட்டின் விபரீதம் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். 

  நன்றாக படிக்க கூடிய தமது மகன் விஷம விளையாட்டினால் உயிரிழந்த தைக் கண்டு விக்னேஷின் பெற்றோர் கலங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி) Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top