நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு - THAMILKINGDOM நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு - THAMILKINGDOM

 • Latest News

  நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு

  யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு இளம் பௌத்த சங்கப் பேரவை விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 

  இரு நீதிபதிகளின் சேவைகளை பாரா ட்டி விசேட நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அஸ்கிரிபீட மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய வற க்காகொட ஞானரத்ன தேரர் இந்த நினைவுச் சின்னங்களை திரு. இளஞ்செழியன் மற்றும் ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு வழங்கி கௌரவித்துள்ளனர். குறித்த இரு நீதி பதிகளும் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றி முன்மாதிரியாகத் திகழ்ந்தமைக்காக கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. 

  இந்நிகழ்வு தொடர்பாக வறக்காகொடஞானரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கை யில், நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்த இத்தகைய நீதிபதிகளின் சேவை மிகவும் துரிதமானதும் அவசியமானதும். 

   உலக இளைஞர் பௌத்த மகா சங்கத்தின் 14ஆவது மாநாடு கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது. இவ்வேளை அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வறக்காககொட ஞானரத்ன தேரர் குறித்த நீதிபதிகளுக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top