போராட்டமும் அதன் வலியும் தெரிந்தவரா சுமந்திரன்: சுரேஸ் கேள்வி(காணொளி) - THAMILKINGDOM போராட்டமும் அதன் வலியும் தெரிந்தவரா சுமந்திரன்: சுரேஸ் கேள்வி(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  போராட்டமும் அதன் வலியும் தெரிந்தவரா சுமந்திரன்: சுரேஸ் கேள்வி(காணொளி)

  போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே
  தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ. அருந்தவராசாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

  தமிழ் மக்களுக்கு சரியான தீர்வ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களாகிய நீங்கள் உங்கள் உடமைகள் உறவுகளை இழந்திருக்கின்றீர்கள். ஆனால் இன்று அதையெல் மூட்டை கட்டிவைத்து விட்டு சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு கிழக்கை பற்றி போராட்டத்தை பற்றி அதன் வலிகளைப்பற்றி என்ன தெரியும். கொழும்பில் பிறந்து வளர்ந்து கொழும்பில் படித்து கொழும்பில் உததியோகம் பார்த்த ஒருவருக்கு இந்த வலிகள் புரியுமா என்பதனை நீங்க்ள எண்ணிப்பாருங்கள்.  அதன் காரணமாகத்தான் அவரது செயற்பாடுகள் தமிழர்களுக்கு விரோதமாக இருக்கின்றது. அவர் தற்போது கூறுகின்றார் இடைக்கால அறிக்கையில் நாம் அரைவாசி தூரம் போய்விட்டோம். மிகுதி அரைவாசித்தூரம் போகவேண்டுமாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஆணை தரவேண்டும் என்கின்றார். அது இல்லாத ஒன்றுக்கான ஆணை.

  இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களை குழிதோண்டி புதைக்கக்கூடிய விடயம் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஆணை கேட்கின்றார். நீங்கள் வீட்டிற்கு பொடும் புள்ளிடியென்பது நாங்கள் எங்களை குpதோண்டி புதைப்பதற்கான ஆணையென்பதேயாகும்.
  தந்தை செல்வாவின் சின்னம் வீடாக இருக்கலாம்.

  தமிழர் விடுதலைக்கூட்டணி வந்ததன் பின்னர் உதய சூரியனாக இருக்கலாம். அது சில காலம் முடக்கப்பட்டதனால் மீண்டும் வீட்டிற்கு போகலாம். ஆனால் நாம் இங்கு பார்க்க வேண்டியது கொள்கை ரீதியாக எமது தீர்வை படிப்படியாகவேனும் பெற்றுக்கொள்ள போகின்றோமா இல்லையேல் எங்களை ஒட்டுமொத்தமாக விலைபேசி விற்கப்போகின்றோமா?

  -விசேட செய்தியாளர்-வவுனியா
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: போராட்டமும் அதன் வலியும் தெரிந்தவரா சுமந்திரன்: சுரேஸ் கேள்வி(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top