Breaking News

மாகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் கவனமெடுக்குமாறு - திஸ்ஸ விதாரண!

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் என்பது மக்களின் உரிமை. மக்களின் உரிமையை பறிக்கா மல் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில்  கவனமெடுக்க  வேண்டுமென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 

மாகாண சபைகளுக்களுக்கான தேர்த ல் விடயமாக கருத்துரைக்கையி லேயே  மேற்கண்டவாறு தெரிவி த்தார். கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களு க்கான மாகாண சபைகளின் கால எல்லை கடந்த வருடத்துடன் நிறை வடைந்துள்ளது. 

கடந்த காலங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தியமையினால் இது தொடர்பில் சிறப்புரிமை கொடுக்கப்படவில்லை. அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் விரைவான நடவ டிக்கைகளை முன்னெடுத்த அவசியம். 

அதேபோன்று இவ்வருடம் செப்டம்பர் மாதமாகும் போது வட, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான பதவிக் காலமானது எதிர்வரும் செப்டொம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களு க்கான தேர்தல் பிற்போடப்பட்டதை போன்றல்லாமல் மாகாண சபைகளு க்கான தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படுமென எதிர்பார்ப்பாகவுள்ளது. 

 மாகாண சபைகள் என்பது மக்களின் உரிமை. அவர்களின உரிமை மீறப்படாத வகையில் அரசாங்கம் நன்மதிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்து ள்ளார்.