Breaking News

தமி­ழர்­க­ளின் நீதி விட­யத்தில் சர்­வ­தேசம் தாம­திக்­கக்­கூ­டாது - விக்­கி­னேஸ்­வரன்.!

இலங்­கையில் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களால் மட்­டுமே ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஐ.நா.மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் தமி­ழர்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக் ­கொ­டுக்க சர்­வ­தேச சமூகம் இனியும் தாம­திக்­கக்­கூ­டாதென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.


ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு வின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அது குறித்த கேள்­வி­யொன்­றுக்­கான பதி­லி­லேயே இவ்­வாறு தெரிவித்துள்ளார். 

 மேலும் தெரி­விக்கையில்.... 

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30 / 01 என்ற பிரே­ரணை ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்­டது. அதன் கீழ் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பல கடப்­பா­டுகள் இருந்­தன. அவற்றை நிறை­வேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்­கப்­பட்­டது. 

ஆனால் அவற்றை நிறை­வேற்­றா­ம­லேயே இலங்கை அர­சாங்கம் இருந்து வந்­தது. கடந்த மார்ச் மாதத்தில் ஜெனி­வாவில் நடை­பெற்ற மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. 

இதற்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யது. பொறுப்­புக்­கூ­றலை உள்­ள­டக்­கிய நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தற்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் அதன்­போது வழங்­கப்­பட்­டது. இலங்­கையின் அனு­ச­ர­ணையைப் பெறு­வ­தற்­காக மேற்கு நாடுகள் அந்தப் பிரே­ர­ணையின் காரத்தை பெரு­ம­ள­வுக்குக் குறைத்­தன என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். 

சர்­வ­தேச சமூகம் தற்­போ­தைய இலங்கை ஆட்­சி­யா­ள­ருக்குச் சாத­க­மான முறை­யி­லேயே அப்­போது இந்தத் தீர்­மா­னத்தைக் கொண்­டு­வந்­தன. அப்­ப­டியும் அர­சாங்கம் அதன் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. இப்­போது ஒரு வருடம் கடந்­து­விட்­டது. 

இன்று ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் அடுத்த கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. ஆனால் இந்த ஒரு வரு­டத்தில் கொடுத்த வாக்­கு­று­தி­களில் எவை நிறை­வேற்­றப்­பட்­டன? காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் சம்­பந்­த­மான அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­ வந்து நிறை­வேற்­றப்­பட்டு இப்­போது ஒன்­றரை வரு­டங்கள் சென்­று­விட்­டது. 

இன்னும் அது செயற்­படத் தொடங்­க­வில்லை. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இன்னும் இரத்துச் செய்­யப்­ப­ட­வில்லை. அந்தக் கொடூ­ர­மான சட்­டத்தின் கீழ் கைதான பலர் இன்­னமும் தடுப்பில் உள்­ளனர். பலர் சம்­பந்­த­மாக வழக்­குகள் பதி­யப்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்கள் தொடர்­கின்­றன. 

இன­நெ­ருக்­க­டிக்­கான அர­சி­ய­ல­மைப்பு மூல­மான தீர்வு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையும் தற்­போது இல்லை என்றே கூறலாம். நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­க­ளை­ய­டுத்து கூட்­ட­ர­சாங்கம் அதனை முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் குறைவு என்­பதே யதார்த்தம். 

இந்த நிலையில் சர்­வ­தேசம் என்ன செய்­யப்­போ­கின்­றது? சர்­வ­தே­சத்தின் அழு த்­தங்­களால் மட்­டுந்தான் இங்கு ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், தமி­ழர்­க­ளுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்­வ­தேச சமூகம் இனி யும் தாம­திக்­கக்­கூ­டாது. 

அமெ­ரிக்­காவில் இருந்து வந்த நிஸா பிஸ்வால் அவர்­க­ளிடம் ஐ.நா மீண்டும் இரு­வ­ரு­டங்கள் தவணை கொடுப்­பதைப் பற்றி எனது ஆட்­சே­ப­னை­களை சென்ற வருட ஆரம்­பத்தில் தெரி­வித்த போது தமி­ழர்­களை ஒரு போதும் அமெ­ரிக்கா கைவி­டாது என்றார். இப்­பொ­ழுது அவரும் பதவி இழந்­து­ விட்டார். 

எமது பெரும்­பான்­மை­யின அர­சாங்கம் நெருக்­குதல் இல்­லா­விட்டால் ஒரு போதும் எமது உரி­மை­களைத் தர­முன்­வ­ராது என்­பதே எனது கருத்து. நியா­ய­மான முறையில் போர்க் குற்­றங்­களை விசா­ரிக்க அர­சாங்கம் முன்­வ­ராது. எந்­த­ள­வுக்கு நெருக்­கு­தல்­களை பிற அர­சாங்­கங்கள் உண்டு பண்­ணு­வன என்­பது நாம் அவர்­க­ளுடன் சேர்ந்து பேசி ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தொன்று. 

காலங் கடந்தால் ஆறின கஞ்சி பழங்­கஞ்சி ஆகி­விடும். சர்­வ­தேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இல ங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்க ப்பட வேண்டுமென ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடி ப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுக்க முடிமென எண்ணுகின்றேன் என்றார்.