
உள்நாட்டு மருத்துவம் பிற நாட்ட வர்களினால் அபகரித்துச் செல்லப்படு வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்து ள்ளார். கடந்த காலங்களில் வெளி நாட்டவர்களினால் அபகரித்து செல்ல ப்பட்ட மருத்துவ முறைகள் இன்று பணத்துக்காக விலை பேசப்படுவதா கவும் தனது ஆதங்கத்தை தெரிவித்து ள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுள் அமைச்சும் இணைந்து நட த்தி வரும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும் கண்காட்சியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக யாழ்ப்பாணத்திலுள்ள சித்த மருத்துவ பீடத்தில் நடைபெற்றது.
இதன்போது “பரராசசேகர வைத்திய மாலை” என்ற சித்தமருத்துவ நூல் இந்திய உரையாசிரியர் சே.சிவசண்முகராஜாவின் வெளியிட்டு வைக்கப்ப ட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எமது நாட்டின் வைத்திய முறைகளை பண த்திற்காக விற்பனை செய்யாது பாதுகாக்க வேண்டுமென எச்சரிக்கை விடு த்துள்ளார்.