Breaking News

இலங்கை குறித்து ஜெனி­வாவில் 14 உப குழுக்­கூட்­டங்கள் - மார்ச் 02.!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14 உபக்­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளன.

இக் கூட்­டங்­களில் இலங்கை பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும் கல ந்­து ­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். அந்­த­வ­கையில் எதிர்­வரும் 2ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை தென்றல் அமைப்பு இலங்கை தொடர்பில் 11 ஆவது இலக்க அறையில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. 

அதே­போன்று ஏ.பி.சி. தமிழ் ஒலி என்ற அமைப்பு 21 ஆவது இலக்க அறையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் விசேட உபக்­கு­ழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்­ளது. அதே­போன்று 5ஆம் திகதி அச்­சு­றுத்­தப்­பட்ட மக்­களின் அமைப்பு ஒரு உபக்­கு­ழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்­ளது. 

ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 22 ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. மேலும் 7ஆம் திகதி பிரான்ஸின் ஒரு மனித உரிமை அமைப்பு 8ஆம் இலக்க அறையில் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்­ளது. 

8ஆம் திகதி மற்­று­மொரு சர்­வ­தேச அமைப்­பினால் இலங்­கையில் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 27ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடக்­க­வி­ருக்­கி­றது. 9ஆம் திகதி லீபொன்ட் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் மற்­று­மொரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்படவுள்ளது. 

8 ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 12ஆம் திகதி பாரதி கலா­சார அமைப்­பினால் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மனித உரி­மை ­பே­ரவை வளா­கத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

அதே­போன்று 13 ஆம்­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறை யில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு தரப்­பினர் கல ந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

மேலும் 14 ஆம்­தி­கதி புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம் தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

குறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொட ர்­பி­லேயே இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ள னர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் எதிர்­வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவ­காரம் தொட ர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மேலும் மற்­று­மொரு சர்­வ­தேச அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடை­பெ­ற­வுள்­ளது. இது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 27 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

அந்த வகையில் இந்த அனைத்து உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை தொட ர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்பட வுள்ளமை விசேட அம்சமாகும்.