அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம் - THAMILKINGDOM அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம் - THAMILKINGDOM

 • Latest News

  அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்

  வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலி டத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார்.

  யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல் லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட் சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட் சையின் பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளி ன் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாண விகளின் பெயர் விபரங்கள் பிரசுரமாகியுள்ளன. 

  அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 

  1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா       1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 
  1. நவோதயா ரணசிங்க - பெண்கள் உயர் பாடசாலை, கண்டி 
  1. லிமாஷா அமந்தி விமலவீர - மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி 
  1.ரந்தி லக்பிரியா - சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை 
  1.கவீஷ பிரதீபத் - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி 
  2.நிபுனி ஹேரத் - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 
  2.அனீஷா பெர்னாண்டோ - சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு 
  2.ரிஷினி குமாரசிங்க - சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட 
  2.கவீன் சிறிவர்தன - புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்பு இதேவேளை இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top