ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.! - THAMILKINGDOM ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.! - THAMILKINGDOM

 • Latest News

  ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.!

  கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுக்கு கண்டியைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது டன் சிங்கள பௌத்த மக்கள் இனவாதிகள் அல்ல என விளக்கமளித்துள்ளனர்.

  கண்டி மாவட்டத்தில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன் முறைகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த ஐரோ ப்பிய நாடுகள் நேற்றைய தினம் தனது தூதர்களை கண்டி மாவட்ட த்தின் தற்போதைய நிலமைகள் குறி த்து ஆராய்வதற்காக அனுப்பியிரு ந்தது. 

  இப் பயணத்தின் இறுதியில் கொழும்புக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொ ன்றை நடத்திய போதே கண்டியைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் இவ் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனா்.  

  ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் துங்-லாய் மார்க், ரொமேனிய தூதுவர் விக்டர் சியுத்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோல்கர் ஆகியோர் கண்டி மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

  இவ் விஜயத்தின் போது சிங்கள பௌத்த மக்களின் மிக முக்கிய மதத் தலை வர்களாக கருதப்படும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார். 

  இக் கலந்துரையாடல்களின் போது கருத்துப் பரிமாறல் மற்றும் ஆக்க பூர்வ மான உரையாடல்களை ஏனைய மதத்தலைவர்களுடன் முன்னெடுப்பதனூ டாக மீண்டும் முன்னர் ஏற்பட்டதை போன்ற வன்முறைகள் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதை தூதுவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

  இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் முஸ்லீம் மக்களை யும் நேரில் சென்று பார்வையிட்ட ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தமது விஜயத்தின் இறுதியில் கண்டி நகரில் ஊடகவியலாளர் சந்திப்பும் நடை பெற்றுள்ளது. 

  இதன்போது கண்டி மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறை கள், தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை மேலும் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

  அதேவேளை சமய மற்றும் இன வெறுப்புணர்வூட்டும சம்பவங்கள் பற்றி கவனம் செலுத்தாவிடின் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள் பற்றி ஸ்ரீலங்காவின் பிரஜைகள் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்துள்ளனா். 

  அரசியல், சமய மற்றும் சமூக தலைவர்கள் முன்வந்து இந்த வெறுப்புண ர்வூட்டும் பேச்சுகள் மற்றும் இன வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த ஐரோப்பிய நாடுக ளின் தூதுவர்கள், வெறுப்புணர்வூட்டும் குற்றங்களுக்கு கடுமையான தண்ட னைகள் வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.   

  இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தாங்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் முன்னணி சிங்கள ஊடகங்களான லங்காதீப, டெய்லி மிரர், சண்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் செய்தியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ஐரோப்பிய நாடுகளின் தூது வர்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனா். 

  சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் முஸ்லீம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவில்லை என்று குறிப்பிட்ட குறித்த சிங்கள ஊடகவியலாளர் முதல்நாள் முதல் வன்முறை தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் என்ற வகையில் தன்னால் இதனை உறுதியாக கூற முடியும் எனத் தெரி வித்தாா். 

  இக் கருத்திற்கு அங்கிருந்த ஏனைய சிங்கள ஊடகவியலாளர்களும் ஆதரவு வெளியிட்டதுடன் சிங்கள பௌத்த மக்கள் வன்முறைகளை கட்ட விழ்த்து விட்டதாக கூற வேண்டாமென ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனா். 

  சிங்கள பௌத்தமக்கள் ஏனைய இனங்களுடன் ஒற்றுமையாகவே கண்டியில் வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்த ஊடகவியலாளர்கள் முஸ்லீம் காடை யர்கள் சிலர் சிங்கள சாரதியொருவரை தாக்கியதாலேயே வன்முறைகள் தூண்டப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினர். 

  சிங்கள ஊடகவியலாளர்களின் ஆவேசத்துடனான இந்த விளக்கங்கள் காரண மாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தச் சென்று சிங்கள ஊடகவியலா ளர்களின் ஊடக சந்திப்பிற்கு செவி மடுக்க நேரிட்ட ஐரோப்பிய தூதுவர்கள் அனைத்து விளக்கங்களையும் அமைதியாக செவிமடுத்து விட்டு அங்கிருந்து கொழும்பு திரும்பியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top