Breaking News

புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் தொடா்பான விடயத்தில் மஹிந்த! (காணொளி)

எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மீது காணப்படுகின்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இன்று இழந்து ள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று கொண்டு வருவது அவசியமில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம் பெயர் ந்த தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட் டம் தொடர்பாகவும் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச தனது பாரி யாரான ஷிரந்தி ராஜபக்சவுடன் இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார். தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடு பட்டதன் பின் பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய தலைவரான மல்வத் துப்பீட மகாநாயக்க தேரரை சந்தித்த மஹிந்த ராஜபக்ச ஆசிபெற்றுள்ளாா். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக ஒன்றி ணைந்த எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பாக தென்னிலங்கை உட்பட ஸ்ரீலங்காவில் பரபரப்பாக பேசப் பட்டு வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இது தொட ர்பான கருத்தை இன்று தெரிவித்துள்ளாா்.

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரது கடமைகள் என்ன? தெற்கை விடுங்கள். அவர் வடக்கை பிளவுபடுத்துவதை மாத்திரமே தவிர குறைந்த பட் சம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி கதைப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக எதற்கு நம்பிக்கயைில்லா பிரேரணை. வவுனியாவிலும் அவர்கள் தோல்வியடைந்துள்ளனா்.

அவர்கள் மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடையே வீழ்ந்து கிடக்கின்ற நிலை யில் நாங்கள் எதற்காக முயற்சிக்க வேண்டும்?” என தெரிவித்துள்ளாா். இதே வேளை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்ட னுக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெ டுத்துள்ளாா்கள்.

 இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார். “புதிய விடயமல்ல. பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு எதிர்ப் பார்ப்புக்கள் தோற்ற பின் மக்களின் எதிர்ப்புக்கள் வெளிவர ஆரம்பிக்கும்” எனத் தெரிவித்துள்ளாா்.