Breaking News

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவலை நிகழ்வுகள் அனுஸ்டிப்பு.!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் நினைவு கூரப்பட்டுள்ளது. இதன்படி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் அஞ்சலிக்கப்பட்டுள்ளது.  

இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டுமெனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன் னணியின் சார்பில் பூபதி கணபதிப் பிள்ளை அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந் நிலையில் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அன்னை பூபதி உயிரிழந்தார்.

இதனையடுத்து தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவு கூர ப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மலர் துாபி, சுடர் ஏற்றி அஞ்சலி செலு த்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ் வில் பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்க ளும் கலந்து சிறப்பித்துள்ளனா். 

இதேவேளை, மட்டக்களப்பு நாவலடியில் அன்னை பூபதியின் 30 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவ ரின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா பிள்ளைகள் ஈகைச்சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்பட்டது. நினவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக் களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாதென அன்னை பூபதியின் பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் அன்னை பூபதியின் பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் இணை ந்து காலை 9.00 மணிக்கு பூபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து பிள்ளை யம்மா அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச் சுடரை ஏற்றினார். 
இதனைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் த.சுரேஸ், மட்டு. மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவான், ஜக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன் அரசியல் கட்சியினர்கள் பொது மக்கள் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள் ளனா்.