Breaking News

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான மனு குறி த்து நாளை மறுநாள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கி வந்த நாசக் கார ஸ்டெர்லைட் ஆலையினை நிரந் தரமாக மூடக்கோரி, கடந்த 22ம் தேதி 18 கிராமங்களை சேர்ந்த பொது மக் கள் மிகப்பெரிய பேரணியினை முன் னெடுத்துள்ளனா். 

அப்பொழுது தமிழக காவல்துறை நட த்திய காட்டுமிராண்டித்தனமான அடி தடி மற்றும் துப்பாக்கிசூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனா். 

இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்ப வம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் துப்பாக்கி சூடு தொடர்பாக, காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சமும், காயமடைந் தோருக்கு ரூபாய் 10 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட வேண்டுமென  கந்தகுமார் என்பவர் தொடுத்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

அதனை விசாரித்த நீதிமன்றம், மனு குறித்து தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.