Breaking News

சிறையிலிருந்து வெளியே வந்த பௌத்த பிக்கு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேர ருக்கு பிணை அனுமதியை வழங்கியுள்ள நீதிமன்றம், வெளிநாடு செல்வதற் கான இடைக்கால தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்வ தற்காக அரச மட்டத்திலும் அதே போல தென்னிலங்கை சமூக மட்டத் திலும் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு வந்த நிலையிலேயே விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலி கொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சறுத்திய குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை 6 மாத காலத்திற்கு சிறை வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த 14ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்து ஞானசார தேரர் கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்க ப்பட்டார். ஞானசார தேரருக்கு ஏற்பட்ட நிலைமையானது ஒட்டு மொத்த பௌத்த சாசனத்திற்கே ஏற்பட்ட பேரிடி என்று சுட்டிக்காட்டுகின்ற தென்னி லங்கை கடும் போக்குவாத அமைப்புக்கள் அவரை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்த நிலையில் சத்தியாக்கிரகப் போராட் டத்தையும் ஆரம்பித்திருந்தன.

இந் நிலையில் ஞானசார தேரருக்கான பிணை கோரிக்கைக்கான மனு ஹோ மாகம நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கோரிக்கை இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய பிணை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் உதேஷ் ரணதுங்க, 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற் கான அனுமதியை வழங்கினார். அத்துடன் ஞானசார தேரரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்வதற்கும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்..