Breaking News

நாடாளுமன்றில் சீற்றத்துடன் சிறிதரன்.!

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்காது உதாசீனமாக செயற்பட்டுவரும் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமை யிலான அரசாங்கமும், தமிழர் தாயகப் பகுதிகளில் குடிப்பரம்பலை மாற்றிய மைக்கும் வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள் ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது நீண்ட விளக்கத்துடன் இக் குற்றச்சாட்டை முன்வைத்த அதே வேளை நல்லாட்சி என்று கூறிக் கொள்ளும் மைத்ரி – ரணில் தலை மையிலான அரசாங்கத்தின் இந் நட வடிக்கைகள் தமிழின சுத்திகரிப்பு என் றும் கடுமையாக சாடியுள்ளாா்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தெற்குப் பகுதியில் சீனாவின் உதவியுடன் மேற் கொள்ளத் திட்டமிட்டிருந்த இராணுவக் குடியிருப்புத் திட்டம் கைவிடப்பட்டி ருந்த நிலையில் மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தி யுள்ளாா். . .