Breaking News

மஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு !

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவின் தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப் பட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் கால த்தில் தி நேசன் பத்திரிகையின் பாது காப்பு செய்தியாளர் கீத் நொயார் கடத் திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவ விசாரணை க்காகவே மஹிந்த ராஜபக்ச சீ.ஐ.டி இனரால் அழைக்கப்பட்டுள்ளாா். 

சிறிலங்கா தலைநகர் கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பகுதியில் வைத்து தி நேசன் பத்திரிகையின் பாது காப்பு செய்தியாளர் கீத் நொயார் 2008 ஆம் ஆண்டு மே மாதம் கடத்திச் செல் லப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர் பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே சிறிலங்காவின் முன் னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச சீ.ஐ.டி யினரால் அழைக்கப்பட்டுள் ளாா். 

ஓகஸ்ட் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நான்காம் மாடிக்கு வருமாறு அழை ப்பு விடுக்கப்பட்ட கடிதமொன்றை திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் குற் றப்புலனாய்வு பிரிவு பொலிசார் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளனர். 

சீ.ஐ.டி பணிப்பாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன வின் கையொப்பத்துடன் கூடிய அழைப்புக் கடிதத்தை சிறிலங்காவின் முன் னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு ஏழு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு சீ.ஐ.டி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா நேரில் சென்று கையளித்துள்ளாா். 

ஓகஸ்ட் 12 ஆம் திகதி இக் கடிதம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தி நேசன் பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முன் னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமும் சீ.ஐ.டியினர் வாக்கு மூல மொன்றை பதிவுசெய்துள்ளனா்.