Breaking News

பதவி விலகல் விடயத்தை முதலமைச்சரே வெளிப்படுத்த வேண்டும்; அனந்தி

வடக்கு மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக மாகாண ஆளு நர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், பதவியைத் துறப்பது குறி த்து பரிசீலனை செய்யப்படுமென வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாா். 

தற்கால சூழ்நிலை தொடா்பாக நேற்று மாலை மாகாண மகளிர் விவ கார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப் பில், இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

மேன்முறையீட்டு நீதிமன்றின் இடை க்காலத் தடை உத்தரவால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்ப தற்கு அமைச்சர்கள் தாமாக பதவி விலக வேண்டுமென மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, அண்மையில் நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ளாா். 

இந்த நிலையில் மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் 

வடமாகாண ஆளுநர் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக இவ்வா றான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏது வாக இருக்கும். 

மாகாண அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக உத்தியோகபூர்வ அறி வித்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை. ஏற் கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும், நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்று கூடவில்லை. 

ஆனால், டெனீஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சை மீளத்தருமாறு முத லமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் – என் றார். டெனீஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு பதவி வில கத் தயாராக இருக்கின்றீர்களா? 

ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து, மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள்? என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி னர். “நீதிமன்ற விடயத்தை விமர்ச்சிக்க முடியாது. அமைச்சர்களுக்கு நீதி மன்றால் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது வரையில் எந்த நீதிமன்ற அழைப்பும் எனக்கு கிடைக்கவில்லை. பதவி விலகல் தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும்” என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாா்.