Breaking News

ஜனாதிபதி மைத்திரிக்கு முந்திய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த - மோடி.!

இலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­திப்படுத்தி நல்­லி­ணக்­கத்­தையும் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்­தி­ அர­சாங்­கத்தை சர்­வ­தேச ரீதியில் முன்­னெ­டுத்து செல்­வ­தற்­கா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி வாழ்த்தியுள்ளார்.

நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் தொடரும் வங்­காள விரி­குடா வலய நாடு­களின் பல்­துறை தொழில்­நுட்­ப, பொரு­ளா­தார ஒன்­றி­ய­மான பிம்ஸ் டெக் அமைப்பின் அரச தலை­வர்கள் மாநாட்டில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நேபா­ளத்­திற்கு பயணமாகிய ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­விற்கும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்­கு­மி­டையில் நேற்று பிற்­பகல் நடைபெற்ற கலந்துரையாட லில் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

ஜனா­தி­ப­தி­யுடன் சுமுக கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட இந்­திய பிர­தமர் எதிர்­வரும் செப்­டெம்பர் 03ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­ப­தியின் பிறந்த தினத்­திற்கும் தனது முன்­கூட்­டிய நல்­வாழ்த்­துக்­களை தெரி­வி­த்துள்ளாா். 

அத்­துடன் நான்­கா­வது பிம்ஸ்டெக் அரச தலை­வர்கள் மாநாட்டின் இறு­தியில் அதன் தலை­மைத்­துவம் இலங்கை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பில் கருத்துத் தெரி­வித்த இந்­திய பிர­தமர் பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலை­வ­ராக மைத்­திரி­பால சிறி­சே­ன­வினால் வழங்­கப்­படும் எந்­த­வொரு பணி­யையும் உரி­ய­வாறு நிறை­வேற்ற தான் ஆயத் தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். 

மிகுந்த அனு­ப­வ­மு­டைய அர­சியல் தலைவ­ரான ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர் அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற்கான வாய்ப்பு கிடைக்குமெனத் தெரிவித்துள்ளாா்.