Breaking News

ஜனநாயகத்தை நிலை நாட்டியதால் மக்கள் நிம்மதியாக மூச்சு விடுவதாக - ரணில்.!

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மக்கள் நிம்மதியாக மூச்சுவிடக்கூடிய சூழ்நிலை நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலம்பி யுள்ளாா். 

நாடெங்கிலும் 10 இலட்சம் காணி உறு திகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று இரத்தினபுரி மாவட்டத் தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளாா். 

இந்த மூன்று ஆண்டுகள் இலகுவா னவை அல்ல. இவற்றின் பலா பலன் கள் படிப்படியாக கிடைத்து வரு கிறது முதலில் ஜனநாயகம் நிலை நாட்டப் பட்டது. அடுத்து சட்டவாட்சியும், பாராளுமன்ற மேலாண்மையும் உறுதி செய் யப்பட்டது. தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப் பட்டது. 

காணாமல் போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று முழு மையான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான பொறிமுறை அமுலில் உள் ளது. 2020 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த படுகடனை மொத்த தேசிய உற்பத்தி யில் 70 சதவீதமாக குறைப்பது அரசாங்கத்தின் திட்டமாகும். 

இக் கடன்களை எதிர்கால சந்ததிக்கு விட்டு வைக்கப் போவதில்லை என அவர் கூறினார். மூச்சுவிட்ட மூன்றாண்டுகள் என்ற பெயரில் எதிர்வரும் 21 ஆம் திகதி பிரதமர் தலைமையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவ னைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன. 

குடியிருப்பு வசதிகள் இல்லாத மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக் கப்பட்ட 404 குடியிருப்பு மனைகள் தொழிலாளர் குடும்பங்களுக்கு கையளிக்கப் பட்டன. 

மேலும், ஆயிரத்து 550 கோடி ரூபா செலவில் குருகாணல் நகரில் நிர்மாணிக் கப்பட்ட குடிநீர் மற்றும் மலசலகூட திட்டத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். நாடெங்கிலும் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று 4 ஆயிரம் பேருக்கு உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் ஆயிரம் உறுதிகள் வழங்கப்படும். அடுத்தடுத்த நாட்களில் ஏனைய மாவட்டங்களில் காணி உறுதிகள் வழங்கப் படவுள்ளன. 

 எதிர்வரும் திங்கட்கிழமை நான்காயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையில் பிரதமர் தலைமையில் நிய மனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளனா். 

இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் நடைபெறும் என்பது குறிப் பிடத்தக்கது.