Breaking News

எங்கே எங்கள் பிள்ளைகள் ?... எங்கள் உறவுகள் தான் எங்கே? !

என்ற அவல கோஷத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக கதறியழுதுள்ளார். 

வலிந்து காணமலாக்கப்பபட்டோருக் கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் 'நீதியை நிலைநாட்டு, 'வலிந்து காணா மலாக்கப்பட்ட உறவுகளின் விபரங் களை வெளியிட வேண்டும்" போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதை களை கையில் ஏந்திய வண்ணம் கண்ணீர் மல்க தமது கவலையையும் ஆதங் கத்தையும் வெளிப்படுத்தியுள்ளாா். 

மேலும் 30 வடருக்கால யுத்தத்தால் காணமாலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் வெளிப்படுத்தவில்லை, 'பொய் வாக்குறுதிகளை தந்து அரசாங்கம் எம்மை ஏமாற்றுகின்றது" 'காணாமலாக்கப்பட்டோருக்கென கொண்டுவந்த ஆணைக்குழு பொய்யானது, அரசாங்கம் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுவதாக கோஷம் எழுப்பியுள்ளனா். 

காலை 10.30 மணியளவில் கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் முன் றலில் ஆரம்பமாகிய இப் போராட்டம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 11.15 மணியளவில் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செய லகத்தை நோக்கி லோடஸ் வீதியினூடான ஆர்பாட்டக் குழுவை லோடஸ் சந்தியில் வைத்து கலகமடக்கும் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது. 

அதன் பின்னர் சம உரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்ர முதலிகே தலை மையிலான குழு ஜனாதிபதி செயலகத்துக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மாஜரை கையளிக்கச் சென்றுள்ளனா்.