சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.! - THAMILKINGDOM சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.! - THAMILKINGDOM
 • Latest News

  சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.!

  செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அர­சாங்கம் ஒன்றை உருவாக்குவதை தெரிவிப்பாா்கள். 

  அதன் மூலம் எதிர்­வரும் சித்­திரை புத்­தாண்­டுக்கு முன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்­றத்தில் அவ­ருக்கு பொருத்­த­மான எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தில் அமர்த்­துவ தாக  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்று அணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்துள்ளாா். 

  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்று அணி நேற்று கொழும்பில் நடத்­திய சந்­திப் பொன்றில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்ததுடன் பிர­த­மரை பதவி நீக்­க­ வேண்டும் என்­பது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 41பேரும் இணைந்து எடுத்த தீர்­மா­ன­மாகும். 

  அதனால் இவ் எதிர்ப்பு போராட்­டத்தில் 16 பேர் அணி கலந்­து ­கொண்டால் அவர் ­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டிய நிலை ஏற்­படுமெனத் தெரிவித்துள்ளாா். 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top