Breaking News

வடமாகாணத்திற்கான சின்னங்களுடன் குழு ஒன்று தெரிவாகியுள்ளது.!

வடமாகாணத்திற்கான பூ, மரம், விலங்கு, பறவை என்பவற்றினால் வட மாகாண சபையினால் குழு ஒன்று தெரிவாகியுள்ளது. 

வடமாகாண சபையின் 130ஆவது அம ர்வு நேற்றைய தினம் வியாழக் கிழமை நடைபெற்றபோது ஆளும் கட்சி உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் ஒவ்வொரு மாகாண அரசும் தங்களு க்கான பூ, மரம், பறவை, விலங்கு என் பவற்றை தெரிவு செய்துள்ளனர். 

வடமாகாண சபை உருவாக முதல் வடக்கு மாகாணத்திற்கு என மரமாக மருத மரமும், பூவாக வெண் தாமரையும், பறவையாக புலுணியும், விலங்காக ஆண் மானும் தெரிவாகியுள்ளன. 

இவை மாகாணத்தின் சிறப்புக்களை பிரதி பலிப்பதாக இல்லை. எனவே மாகாண சபை உறுப்பினர்கள், துறை சார் அறிஞர்கள், பொதுமக்கள் ஆகி யோரின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை மீளாய்வுக்குட்படுத்தி, தேவை ஏற்படின் அவற்றை மாற்றம் செய்து, வடமாகாணத்தின் பாரம் பரியத்தை பறைச்சாற்றும் விதமாக பழம் ஒன்றினையும் தெரிவு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துள்ளனா். 

கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா, இதனை சபையில் தீர்மானமாக நிறைவேற்றி பயனில்லை. மாகாண சபையால் அங்கிகரீக்கப் பட்டு  அரசிதழாக (வர்த்தமானி) வெளியிட வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா். 

அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர், சி.வீ.கே.சிவஞானம் வடமாகாண த்திற்கான பறவை, மரம், விலங்கு, பூ, பழம் என்பவற்றை தெரிவு செய்வதற்கு தன்னுடன், ஆளும் கட்சி உறுப்பினர்களான சபா. குகதாஸ், பொ. ஐங்கரநேசன், த. குருகுலராஜா, பா. அரியரட்ணம், எதிர்கட்சி உறுப்பினர்களான அலிக்கான் சரிப் மற்றும் ஜெயதிலக ஆகியோரை உள்ளடக்கி குழு ஒன்றினை அமைத் துள்ளார். 

இதேவேளை வடமாகாண சபையின் கடைசி காலம் இன்னும் இரண்டு மாதங் களில் முடிவடையவுள்ளது.