Breaking News

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.!

பொது அமைப்புக்களினால் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ் நிலை யத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு நல்கியுள்ளது. 

அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசி யல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதுடன் தமது கோரி க்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக் கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளனா்.

ஏற்கெனவே பல தடவைகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணா விரத மிருந்து உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேற்கொள்ளும் போராட்டம் அவர்களது உயிருக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத் தக்கூடும் என்ற நிலையிலும் விரத்தியின் உச்சத்திற்குச் சென்றுள்ள குறித்த இளைஞர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பில் ஈடுபட் டுள்ளனா்.

தற்போது மருத்துவ உதவியையும் ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் கைதி களது போராட்டத்தின் நியாயத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் கைதிகளின் போராட்டத்திற்கு பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரை வாக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொது அமைப்புக் களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம். கைதிகள் பிரச்சினையை உங்கள் ஒவ்வொருவரதும் சொந்தப் பிரச்சினையாக கருதி அனைத்து பொது அமைப் புக்கள் தொழிற்சங்கங்கள் உயர்கல்வி நிறுவன மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள்,

ஏனைய கல்விச் சமூகத்தினர், விவசாய அமைப்புக்களை சார்ந்தோர் வர்த்தக சமூகத்தினர் கடற்தொழில் சமூகத்தினர் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோர் பொது மக்கள் இப்போராட்டத்திற்கு அணுசரணை வழங்கி அனைவரும் தவறாது இப்போராட்டத்தில் கலந்து  வலுச் சேர்க்குமாறு அன்பு டன் அழைக்கின்றோம்.