Breaking News

தேசிய பிரச்சினையின் தீர்விற்காகவே பழைய அரசாங்கத்தை விரட்டினோம் - சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில் தான்  பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவ தற்கு உதவியுள்ளோமெனத் தெரிவித்துள்ளாா் சம்பந்தன்.

புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்ற முடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையுள்ளதாக எதிர்க்கட்சி தலைவ ரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள் ளாா். 

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல் வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிர தம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.

எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் சட்டங்களை நிறைவேற்றி மக்க ளுக்கு சேவையினை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. உள்ளுராட்சி மன்றங்கள் பாரிய சேவையினையாற் றும் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த மக்களின் தேவையினை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை எடுக்கவேண்டும். அரசியலில் எப்போதும் பேதங்கள் இருக்கும், அரசியலில் எப்போதும் கருத்துவேறுபாடுகள் இருக்கும்.

என்னவிதமான வேறுபாடுகள், கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் எமது மக் களுக்கு உண்மையாக சேவையாற்றுவதாக இருந்தால் நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்குள்ள பேதமைகளை பயன்படுத்தாமல் அவற்றினை மறந்து மக்கள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வ தன் மூலமே மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்க முடியும்.

நாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அர சியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும், புதிய அரசியல்சாசனம் உருவாக் கப்படவேண்டும்.

ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். அதன் மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும், எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். அப்போது தான் தமிழ் மக்கள் சுய மரியாதையுடன் சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாக கருதப்படுவோமெனத் தெரிவித்துள்ளாா்.