Breaking News

கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்க வாய்ப்பில்லை - ஷிரால் லக்திலக்க.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன் னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து கள மிறங்கும் வாய்ப்பில்லை அது ஒரு கற்பனை கதையாகுமென  ஜனாதிபதியின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க தெரிவித்துள்ளாா். 

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கை யிலேயே இவ்வாறு தெரிவித்துள் ளாா். ஊடகவியலாளர் சந்திப்பில் எழு ப்பிய கேள்விகளும் இவ்வாறு பதில ளித்துள்ளாா்.

கேள்வி : ஜனாதிபதி கொலை சதி முயற்சி குறித்து தகவல் வெளி யிட்ட உளவாளி எனக் கூறப்படுகின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கவுள்ளதாக கூறியிருந் தார். அது உண்மையா? 

பதில் : அதுவொரு கற்பனை கதையாகும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியம் இல்லை.

கேள்வி : எனினும் அது பொய் எனின் தகவல் வெ ளியிட்டவர் கூறிய தக வலை எவ்வாறு நம்ப முடியும்? 

பதில் : அவர் ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சி தொடர்பில் தகவல் வெ ளியிடும்போது இதனை ஒரு காரணியாகவே முன்வைக்கின்றார். அவர் கூறிய கொலை முயற்சி குறித்தே விசாரிக்கவேண்டும்

கேள்வி : எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷவுடன் இணைந்து களமிறங்கும் சாத்தியம் உள்ளதா-? 

 பதில் : அவ்வாறு நடக்காது. அது கற்பனை விடயமாகும். எங்களுக்கு தெரியும். அவ்வாறு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.