Breaking News

"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதகமாக நகர வேண்டும்"

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதி நிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விட யத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளாா்.

பிரதமர் ஒருவர் இருக்கும்போது அப் பிரத மரை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரை தெரவு செய்துள்ளனர். இத் தெரிவு முறை சட்டரீதியான பார்வைக்குள் உள்வாங்கப்படு வதோடு, பாராளுமன்றத்திலும் பெரும்பா ன்மையை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையென நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக, மலையகக்கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், வடகிழக்கிலுள்ள கட்சிகள் தங்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசுகின்ற சூழ்நிலை உருவாக் கப்பட்டுள்ளது.

இது சிறுபான்மை இனத்திற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப் பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமை ப்புக்கு உள்ளது.

எனவே இச் சூழலை புரிந்து கொண்டு எழுந்தமனமாக முடிவெடுக்காமல் தனி நபர் போக்கிற்கு விட்டு விடாமல் சகல கட்சிகளும் கூடிப்பேசி, நடைமுறை க்குச் சாத்தியமான விடயங்களை கையில் எடுத்துக் கொண்டும் மக்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை உத்தரவாதப்படுத்தி அமுல்படுத்து வதற்கும் உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.