தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான நிலைக்கு இதுவே காரணம்.! - THAMILKINGDOM தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான நிலைக்கு இதுவே காரணம்.! - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான நிலைக்கு இதுவே காரணம்.!

  தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுதியான நிகழ்ச்சி நிரலொன்று இன்றி செயற்பட்டமையே தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான இன்றைய கையறு நிலைக்கு காரணம் என வடமாகாண சபை யின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவ ருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

  நடந்து முடிந்துவிட்டதை குறித்து கதைத்துக்கொண்டிருப்பதை விடுத்து, இனி மேலாவது, கட்சி நலன்களைப் புறந்தள்ளிவிட்டு கொள்கை அடிப் படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற் பாட்டை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

  அதேவேளை போர் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள சிறிலங்கா வின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியை பிடிக்க முற்பட்டுள்ள நிலையில்,

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இறுதிக்கட்ட யுத்ததில் நடைபெற்ற போர் குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி புதிய பிர தமராக தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமதிருந்தார்.

  இதனால் ஸ்ரீலங்காவில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்ட ணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் குழப்ப நிலை தொட ர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கையில் யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர் களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை ஸ்ரீலங்காவின் தற்போதைய அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வும் கையில் எடுத்துள்ளதாக விவரித்துள்ளார்.

  இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல் வாதிகள் புலம்ப ஆரம்பித்துள்ளாா்கள்.

  இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்து தான், நாம் அவர்களுடன் கரம் கோத்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து உலகுக்கு நல்லாட்சி என்றோம்.

  ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம். அரசியல் அமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும் அர சியல் அபிலாஷைகளையும் கரைத்துவிட்டோம்.

  ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இன்றி தமக்கிடையில் ஒரு அதிகார போட்டியில் இறங்கியுள்ளனர்.

  தான் உயிருடன் இருக்கும் வரை வடகிழக்கு இணைப்புக்கோ சமஷ்டித் தீர் வுக்கோ இடமளிக்கப் போவதில்லையெனவும் அவரை அவருடன் சேர்ந்து பேசுவதாலும் எதுவும் ஆகப்போவதில்லை.

  சர்வதேசங்கள் தான் இது பற்றி கவனஞ் செலுத்த வேண்டும். ஒரு நிகழ்ச்சி நிரல் இன்றி செயற்பட்டமையே இன்றைய எமது இந்த கையறு நிலைக்கு காரணமாகும். எது எவ்வாறெனினும், நடந்தவையோ அவை நடந்து முடிந்து விட்டன.

  இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந் தள்ளிவிட்டு கொள்கை அடிப்படை யில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை முன் னெடுக்க வேண்டும்.

  இருட்டில் கையாட்டிப் பார்க்காமல் பாதை தெரிந்து பயணிக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் உண்மை யான மனோநிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டுமென வலி யுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், ஒற்றை யாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப் பட்டிருக்கும் கட்டமைப்பு சார் தடைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமன் என்பதைப் புரிந்துகொண்டு காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  இதனால் ஸ்ரீலங்காவில் எவர் ஆட்சியில் உள்ளார்கள் என்று பார்த்து செயற் படாது பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை அரசு என்ற ரீதி யில் போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

  இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியும்.

  இதனால் புரிந்துணர்வை ஏற்படுத்தி உண்மையான இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாது காப்பதற்காக போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இன முரண் பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான நிலைக்கு இதுவே காரணம்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top