விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.! - THAMILKINGDOM விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.! - THAMILKINGDOM
 • Latest News

  விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.!

  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரக்கூடிய சூழலில், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் விடியல் கட்சி சார்பில் நேற்றைய தினம் புலித்தலைமையின் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டுள் ளது.

  தமிழர் விடியல் கட்சியின் சார்பில் பழனியை அடுத்த மானுரில் நடை பெற்ற புலித்தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் பங்கெடுத்த வேல்முருகன் கேக் வெட்டி, கட்சி தோழர்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கியுள்ள னா்.  நிகழ்வில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், பிரபாகரன் அவர்களுக்கு நெருக்கமான தலைவராக அறியப்பட்டவருமான கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனா்.

  முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சென்னையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் காவல் துறை அதற்கு அனுமதி மறுத்த  போதிலும் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top