Breaking News

மஹிந்தவை நீக்கவும் மாட்டார்! ரணிலை ஏற்கவும் மாட்டார்!

“ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாததன் காரணத்தி னாலேயே ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்கினார்” என அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனா திபதிக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்க ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண் டவாறு தெரிவித்துள்ளாா். 

மேலும் நாடாளுமன்றில் நம்பிக்கை யில்லா பிரேரணை ஒன்றை சமர்ப் பிக்க வேண்டுமாயின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின் னரே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி விட்டு ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் பிரதமராக ஜனாதிபதி நியமிக்கமாட்டார்.

இவ் விடயத்தை வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலும் ஜனா திபதி உறுதியாக தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளு மன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய சமர்ப்பிக்கப்படவில்லை அவ்வாறிருக்க அப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது என்பதே எமது கேள்வியாகும்.

நாடாளுமன்றில் அதிகாரம் படைத்த சபாநாயகர் நடுநிலைமையாக செயற் படாது கட்சி சார்பாக செயற்படுகிறார். ஆதை நாம் கவனத்தில் கொள்வதாய் இல்லை நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறுபவர்களின் நடவடிக்கைக்கு நாங்கள் கவனம் செலுத்தப் போவதில்லை.

எது எவ்வாறிருந்தாலும் எதிர்வரும் 7ஆம் திகதி நீதி மன்றம் வழங்கும் தீர்ப் பிற்கமையவே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.” என தெரிவித்ததுடன் மேலும் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர் ப்பிக்கப்பட்டு 5 நாடகளுக்கு பின்னரே அப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத் துக் கொள்ள வேண்டும். விவாதத்தின் பின்னர் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

அவ்வாறு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 113 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதனை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த பிரேரணையில் இச் செயற்பாடு கள் பின்பற்றப்படவில்லை.

வரலாற்றில் ஆளுந் தரப்பு இல்லாது நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற் றுள்ளமை எமது நாட்டில் அன்றி வேறெங்குமில்லையெனத் தெரிவித் துள்ளாா்.