Breaking News

மகிந்தவை சுற்றிய Writ Quo Warranto! பிழைப்பாரா?... துறப்பாரா?

ஆயுதத்தை வீசியவன் கைகளுக்கே திரும்பி வந்துவிடக்கூடியஒரு ஆயுதம் பூமராங். ஓஸ்ரேலிய பழங்குடிகளால் பயன்படுத்தப்பட்ட இந்த பூமராங் போலவே பண்டைய தமிழர்களிடமும் வளரி என்ற ஒரு ஆயுதம் இருந்தது.

பூமராங் மற்றும் வளரி ஆகிய ஆயு தங்களை குறிவைத்து எறிந்தால் அதன் புறப்பாடுகள் ஏறக்குறைய ஒன் றாகவே இருக்கும். ஆனால் பூமராங் மட்டும் அதனை எறிந்தவனின் கைக ளுக்கே திரும்பிவிடும்.

வளரி இலக்கைத்தாக்கும் ஆனால் திரும்பிவராது. இப்போது இலங்கைத் தீவின் பரபர அரசியலில் வளரி மற்றும் பூமராங் கருத்தியல்கள் நிருபிக்கப் பட்டுள்ளன. அந்தவகையில் மஹிந்த உட்பட்ட அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று மாலை ஊடாக வழங்கிய இடைக்கால ஆணைமுக்கியமானது.

இது மகிந்த அன்ட் கோ அரசாங்கத்தின் கவச குண்டலங்களை அதன் சட்ட பூர் வத்”தொங்கு” தன்மையை சீவியெறிந்துள்ளது. இன்று போய் உச்சநீதி மன்றத் தின் தீர்ப்பைப்பார்த்து 12 ஆம் திகதிக்கு வா என்ற செய்தியையும் சொல்லி யுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26 க்குப்பின்னர் மைத்திரி மகிந்த அணி தமது தேசத்தின் சொந்தநீதித்துறையால பெற்றுவரும் குட்டுகளின் வரிசையில் கிட்டிய இன் னொரு செங்குட்டு இது.

ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த  இடைக்கால தடை உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாதென அடம்பிடிக்கும் மஹிந்த இந்த தடை உத்தரவுக்கு எதி ராக நாளை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாகவும் குறிப்பிடு கிறார்.

எனினும் நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டநகர்வு நாட்டின் அரசி யல் அமைப்புக்கு அமைவானதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளியன்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய இறுதித் தீர்ப் புக்கு முன்னர் வந்திருக்கும் இந்த இடைக்காலத்தடையூடாக மகிந்த அமைச் சரவையின் நகர்வுகள் முடக்கப்பட்டுள்ளன.

மஹிந்த அரசாங்கத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாகத்தாக்கல் செய்த WritQuo Warranto!எனப்படும் சகல உரிமைப்பேராணை மனுவாகிய றிட்மனுவுக்குதான் இந்தப்பதில் கிட்டியமை நீங்கள் அறிந்த விடயம்.

ஆக மொத்தம் சிறிலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இன்றைய இடைக்காலத் தடையின் மூலம் மகிந்த அன்ட் கோவின் அமைச்சரவையின் சட்டபூர்வத்தன்மை எதிர்வரும் 12 வரை தற்காலிக வலுவிழப்புக்கு உள்ளாக் கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் இந்தத்தடை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவ ருக்கு பாதமான தீா்ப்பு வந்தால் அந்தோ பரிதாப நிலைதான். ஆகமொத்தம் கடந்த ஓக்டோபர் 26 இல் மைத்திரி எறிந்த வளரி ஆயுதம் நினைத்தது போல அவரது இலக்கை சீவித்தள்ளவில்லை.

மாறாக அது பூமராங்பொறியாக வடிவமெடுத்து இப்போது அவரை நோக்கி மிக அண்மித்துவிட்டது. இனி மகிந்தவும் அவரது அமைச்சரவையும் என்ன செய்ய முடியும்? மகிந்தவை மைத்திரி பதவிவிலக்குவாரா?

தேர்தல் இடம்பெறும்வரை ஜனநாயகத்துக்கு விரோதமாக மகிந்த பிரதமராக ஒட்டியிருக்க விரும்பும் போக்குத்தான் இங்கு சிக்கலாகியுள்ளது. நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டாலும் கூடபுதிய புதிய வியாக்கியானங்களுடன் காலத்தை இழுத் தடிக்கவே மகிந்த முயல்கிறது.

அந்த வகையில் அவருடைய புதிய வியாக்கியானமானது சிறிலங்காவின் அர சியலமைப்பின்படி இறையாண்மை, மக்களிடமே உள்ளது நாடாளுமன்றத் திடம் இல்லையென நேற்று வெளிப்பட்டது.

ஆனால் மகிந்த இவ்வாறு புதியபுதிய வியாக்கியானங்களை வழங்கினாலும் இந்தவிடயத்தில் முடிவை எடுக்கவேண்டிய பொறுப்பு மைத்திரியிடமே வந் திருக்கிறது.

வந்திருக்கிறதென்பதை விட அவர் எறிந்த பூமராங் தடி இப்போது அவரை நோக்கியே வந்துவிட்டது என்பதே பொருத்தமானது. இவ்வாறாக மைத்தி ரியை நோக்கி ஒரு அரசியல் பூமராங் மிகவேகமாக வரும் பின்னணியில் தான் நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்ற புள்ளியில் யானைகள் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியுடன் இன்றிரவு மைத்திரி பேசியிருக்கிறார்.

ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. ரணிலுக்கு பிரதமர் பதவி மீண்டும் வழங்கப்படமாட்டாது என்ற அதே பல்லவியை மைத்திரி பாடியதால் பேச்சுக் கள் தேறவில்லை.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசிய முன் னணி ஒருமுகப்பட்டு நிற்பது அவதானிக்கத்தக்க விடயம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03)மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கும் அப்பால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவுடனும் இன்று பிறிதாக மைத்திரிபேசினார். இன்னும் இரண்டு வாரங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை பெற்று தருவதாக மைத்திரியின் உறுதியளிப்பு வெளிப்பட்டதாக தெரிகிறது.

இவ்வாறான நகர்வுகளுக்கு அப்பால் 2015இல் மகிந்த தொடர்பாக மைத்திரி தெரிவித்தகருத்து இப்போது அவராலேயே மறுதலிக்கப்படுகிறது. அவரது இந்த போலித்தன்மை இலங்கை குடிமக்கள் முன்னால் அவரை ஒரு அக்மார்க் அரசியல் விதூஷகனாக்கியிருக்கிறது.

குறிப்பாக 2015 இல் இடம்பெற்ற அரசதலைவர் தேர்தலில் மகிந்த சென்றி ருந்தால்;, தானும் தனது குடும்பமும், ஆறடிக்குள் சென்றிருக்கும் எனஅன்று சொன்னவர் மைத்திரி.

அவ்வாறு அவர் சொல்வதற்கு முன்னர் தேர்தல்பரப்புரை மேடைகளிலும் குண்டு துளைக்காத ஜக்கெட்டுக்களை அணிந்து “சீன் “போட்;டதும் குறிப்பிடத் தக்கது.

ஆனால் அதேமைத்திரிதான் இன்று அப்போது அவ்வாறு மஹிந்தவால் தனது உயிருக்கு ஆபத்துஇருந்ததாக தெரிவித்த கருத்துகள், வெறும் அரசியல் பேச்சுக்கள் எனவும், மகிந்தவால் தனது உயிருக்குஆபத்து இருந்ததாக, உறுதியான தகவல்கள் எவையும் இருந்ததில்லை என சொல்லியிருக்கிறார்.

அன்று மகிந்த கொல்ல முயல்வதாக தான் சொன்ன கருத்து அரசியல் மேடை களில் உளறப்பட்ட, வெறும் அரசியல் கதை என்றார் நக்கலாகச் சிரித்தார். ஆனால் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச்சதி, உண்மை யில் தன்னை கொல்வதற்கான உண்மையான சதி முயற்சி என்கிறார்.

ஒருவேளை இப்போதுதான் ரணில் மீது போடும் கொலைச்சதியும் ஒரு அர சியல் உளறல் என நாளையே அவர் இன்னொரு முறை சொல்லமாட்டார். என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

நாட்டின் முதன்மை தலையாரி தனது வாயால் ஏற்கனவே மக்களுக்கு கூறிய முக்கியமான கருத்தை அது அரசியல்மேடைக்காக உளறப்பட்ட, வெத்து வேட்டு அரசியல்கதை எனச்சொல்லும் இழிநிலை இலங்கையில் நிருபிக்கப் படுகிறது.

இதனால் தான் தமிழர்கள் அமைதியை விரும்பாவிட்டதால் இராணுவமும்; காவற்துறையும் மீண்டும் வீதிகளில் சோதனைச்சாவடிகளை அமைத்து சோதனை செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுமென யாழ்ப்பாண மாவட்ட கட் டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்றவர்களால் சுலபமாக சொல்லமுடிகிறது.

வவுணத்தீவு பிரதேசத்தில் இரண்டு காவற்துறையினர் கடந்த வெள்ளி யன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வத்தை மையப்படுத்தி யாழ் வட்டுக் கோட்டையில், நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளாா். 

மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சியின் இந்தக்கருத்து எங்கோ கேட் டலாக இருக்கிறதா என நினைக்கின்றீர்களா? இது இலங்கையில் நிறை வேற்று அதிகாரங்களை உருவாக்கிய ஜேயார் ஜெயவர்த்தாக சொன்ன கருத்து இது.

இலங்கையில் காலங்கள் மாறினாலும் கொழும்பு அதிகார மையத்தில் இரு ந்து வெளிப்படும் காட்சிகள் மாறாது என்பதற்கு இது இன்னொரு சாட்சியம்.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -