Breaking News

ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும்-சிறீதரன்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில், முழுமையாக ஆராய்ந்து பார்த்து தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கையெடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றபோது, அதில் “கறுப்புச்சட்டை“ குழுவொன்று குழப்பத்தில் ஈடுபட்டது. அவர்கள் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

அந்த குழப்பங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த சம்பவங்கள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.

பேரணியின் பின்பகுதியில் நின்றதால், முன்பகுதியில் நடந்த சம்பவங்கள் எதையும் நான் அறிந்திருக்கவில்லையென்றும், உணர்வுபூர்வமான மக்கள் போராட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை தான் விரும்புவதில்லையென்றும் தெரிவித்தார்.



கிளிநொச்சி போராட்டத்தின் பின்னர், தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்டு வருவதால், அந்த சம்பவம் குறித்த செய்திகளையும், வீடியோக்களையும் இனிமேல்தான் பார்க்க வேண்டும், தமது கட்சியை சார்ந்த யாராவது அதில் சம்பந்தப்பட்டார்களா என்பதை அதன் பின்னர்தான் உறுதிசெய்யலாம் என்றும் தெரிவித்தார்.



சில வேளைகளில் தமது கட்சியை சார்ந்தவர்களும் இந்த குழப்பத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் இப்படியான குழப்பங்கள் ஏற்படாத வகையில் சரிசெய்யப்படும் என்றும் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

கிளிநொச்சி போராட்டத்தில் தமிழரசின் ரௌடித்தனம்(காணொளி)