தப்பி ஓடமாட்டோம் : முகங்கொடுக்கத் தயார் - பிரதமர் ரணில் - THAMILKINGDOM தப்பி ஓடமாட்டோம் : முகங்கொடுக்கத் தயார் - பிரதமர் ரணில் - THAMILKINGDOM

 • Latest News

  தப்பி ஓடமாட்டோம் : முகங்கொடுக்கத் தயார் - பிரதமர் ரணில்

  எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம் கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதிலிருந்தும் நாங்கள் தப்பி ஓடமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். 

  பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பிரதான நடவடிக்கைகள் நிறை வடைந்த பின்னர், எதிர்க்கட்சி உறுப்பி னர்களால் அமைச்சர் ரிஷாத் பதியு தீனுக்கு எதிராக கொண்டுவரப்பட் டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரிப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சை யில் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளாா்.

  மேலும் தெரிவிக்கையில்,

  எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் நிராகரிக்கவில்லை. அதுதொடர்பான விவாதத்துக்கு திகதி நிர்ணயிக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கின்றது. அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

  தெரிவுக்குழு அமைப்பது பாராளுமன்றத்தினாலாகும். பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவே அது அமைக்கப்படுகின்றது. நாங்கள் பெயரிடப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவுக்கு அமைச்சர் ரிஷாத் பதியு தீனையோ வேறு உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தேடிப்பார்க்க முடியும். தேவையென்றிருந்தால் எந்த ஆளுநர் தொடர்பாகவும் தேடிப்பார்க்கலாம்.

  அத்துடன் தெரிவுக்குழுவில் திருத்தங்களை ஜயம்பதி விக்ரமரத்ன முன் வைத்திருக்கின்றார். அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரை வேண் டுமானாலும் தேடிப்பார்க்க முடியும்.

  தேவையென்றிருந்தால் எந்த ஆளுநர்கள் தொடர்பாக தேடிப்பார்க்கவும் எந்த தடையும் இல்லை. அத்துடன் எதிர்க்கட்சியின் பிரேரணையை நாங்கள் நிரா கரிக்கவில்லை. எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரே ரணைக்கு முகம்கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம்கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை.

  அதனால் நாங்கள் எதில் இருந்தும் தப்பி ஓடமாட்டோம். மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்திருக்கும் பிரேரணை இன்னும் மேலதிக ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

  அத்துடன் மக்கள் இது தொடர்பாக எதிர்பார்த்துள்ளதனால் இதனை கட்சி அர சியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் கொண்டு செல்ல நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சபாநாயகருக்கு எதிராகவும் பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் தெரி விக்கப்பட்டன. அதனால் இது தொடர்பாக சபாநாயகரின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தப்பி ஓடமாட்டோம் : முகங்கொடுக்கத் தயார் - பிரதமர் ரணில் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top