தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம் - THAMILKINGDOM தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம் - THAMILKINGDOM

 • Latest News

  தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம்

  இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தலைமை ஏற்று முன்­னெ­டுக்­க­வேண்டும் "இல ங்கை தமிழ் மக்கள் உங்­க­ளி­டத்தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் என்று இந்­திய மக்­களை தேர்­தலில் வெற்­றி­பெற்ற அந்­நாட்டு பிர­தமர் நரேந்­திர மோடிக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் வடக்கு மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

  அந்தக் கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தலைமை ஏற்று முன்­னெ­டுக்­க­வேண்டும் "இலங்கை தமிழ் மக்கள் உங்­க­ளி­டத்தில் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்.

  உங்­க­ளிடம் பல விட­யங்­களை அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்" தமிழ் மக்கள் தமது பூர்­வீக வாழி­டங்­களில் தொடர்ந்து அர­சாங்க அடக்­கு­முறை, இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு மற்றும் சிங்­கள குடி­யேற்றம் ஆகி­ய­வற்றின் பாதிப்­புக்­க­ளினால் பெரும் துன்­பத்தை அனு­ப­வித்து வரு­கின்­றனர் இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது ஐக்­கிய இலங்­கைக்குள் சமத்­துவம், நீதி, இறைமை மற்றும் சுய மரி­யா­தையை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­று­வ­லி­யு­றுத்­தி­யி­ருந்­தீர்கள்.

  இந்­தியா தனது அய­ல­வர்கள் சந்­தோ­ச­மா­கவும் திருப்­தி­யா­கவும் இருப்­பதை உறு­தி­செய்யும் நேரம் வந்­தி­ருக்­கின்­றது. மோடி ஆட்சிக்கு முதன் முதலில் வந்தபோது நவீன இந்தியாவின் சிற்பியாக அவர் திகழ்வார் என்று சுவாமி வியானந்தஜி குறிப்பிட்டமை சரியாகி விட்டது இந்த தேர்தல் வெற்றி ஒரு பெரு வெற்றியாகும்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top