Breaking News

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிற்காக பதில் அமைச்சர்கள் நியமனம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்த நிலையில் குறித்த சில அமைச்சுக்களுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள் ளனா். 

அந்த வகையில், புதிய பதில் அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதி முன் னிலையில், ஜனாதிபதி மாளிகையில் அமைச்சுப் பொறுப் புக்களை பெற்றுக் கொண்டனர். நகர திட்ட மிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்ரிபால சிறி சேனவினால் இன்று (10) நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமைபுரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டு றவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நிய மிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ் சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ் அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல் லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனா்.