Breaking News

காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ?

அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியி ருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார்.

எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப் பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலை யில் சாட்சியமளித்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறு வனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித் துள்ளாா். 

ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்கு தல் குறித்து விசாரணைகளை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப் பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலை யில் சாட்சியமளிக்க வரவழைக்கப் பட்ட காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம் மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் சாட்சியமளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கேள்வி : உங்கள் அமைப்பைப் பற்றி விளக்கமளிக்க முடியா? 

பதில் : காத்தான் குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம் மேளமானது 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் 140 முஸ்லிம் நிறு வனங்களும், 65 பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களும் உள்ளன.

இத் துன்பியல் சம்பவம் அளவிடமுடியாத துக்கத்தையும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு சூத்திரதாரி காத்தான்குடியிலிருந்து வந்தமை துரதிஸ்ட மாகும். 250ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், 500ற்கும் அதிகமானவர் கள் காயமடைந்தனர்.

இவர்களுக்கான நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த நிகழ்வுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. காத்தான் குடியில் மக்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கை உடையவர்களாக இந்த விடயத் தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

மேலும் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் பேசுவோமானால் சஹ்ரான் ஹாசிம் வறுமையான சூழலிலேயே வளர்ந்து வந்ததுடன், ஐந்தாம் தரம் மட்டுமே படித்தார். அதன் பின்னர் ஜமியத்துல் பரா வில் இணைந்து கொண்டார்.

எட்டு வருட பாடநெறியை பூர்த்தி செய்ய இணைந்து கொண்டதுடன், அதன் பின்னர் அவருக்கு மௌலவி சான்றிதழ் வழங்கப்படும். எனினும் நிர்வா கத்துக்குக் கட்டுப்படாமை, சட்டத்தை மதிக்காமை, பிரச்சினைகளை ஏற்படுத் தும் நபராக காணப்பட்டதால் இவரை சபை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் நிர்வாகம அவரை கல்லூரியிலிருந்து நீக்கியதால் முழுமையாக கல்வியை பூர்த்திசெய்யவில்லை. தனது சான்றிதழைப் பெற மதரஸாவைத் தேடிக்கொண்டிருந்தபோதே குருநாகலில் கொட்டரமுல்ல பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் இணைந்தார். அதில் கூட அவர் நிலைக்கவில்லை. அவருடைய கொள்கைகளால் அக்கல்லூரியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் காத்தான்குடிக்கு வந்தார். அங்கு தாருல் அதர் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்தார். நபித்துவக் கலாசார வீடு என்ற அர்தத்தைக் கொண்ட நிறுவனத்தை உருவாக்கினார். அவருடைய செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது தன்னை ஒரு நடுநிலையாளராக அறி முகப்படுத்தினார்.

இரத்ததானம் செய்வது, போதையிலிருந்து மக்களை மீட்பது. சிரமதானங்க ளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். எனினும் படிப்படியாக அவருடைய செயற்பாடுகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின் னரே பிரச்சினைகளை தூண்டக்கூடிய பேச்சுக்களை 2016ஆம் ஆண்டிலிருந்து பேசத்தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து எமது அமைப்பினாலும் பேச்சுவார்த்தைக்கு அழைக் கப்பட்டபோதும் அவர் சமூகமளிக்கவில்லை. அப்போது அவருக்கு 20 வயதி ருக்கும். அவர்ருடைய நடவடிக்கைகள் ஜம்இயத்துல் உலமாவினால் கண் காணிக்கப்பட்டது.

அவருடைய பேச்சுக்களின் பாணிகள் மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டன. பெண்கள் நகை அலங்காரங்கள் அணியக்கூடாது என்பதான கருத்துக்கள் கூட இருந்தது. அவர் தமிழிலேயே நன்கு கவரக்கூடிய வகையில் பேசக்கூடிய பேச் சாளர். தாருல் அதரினை ஆரபிக்கின்றபோது பணத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பற்றி அவர்களுக்கான நிதி வழங்கப்படக்கூடாது என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்தோம்.

அவருடைய செயற்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்த முதலாவது சந்தரப்ப மாகும். தன்னுடைய நிறுவனத்தைப் பதிவுசெய்வதற்கு முயற்சித்தபோது நாம் அதனை முறியடித்திருந்தோம். அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் நிலை யத்திலிருந்து பேச்சுக்களை ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டபோதும் நாம் அதனை எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.

ரம்ழான் கொண்டாட்டம் தொடர்பிலும் முரண்பாடு ஏற்பட்டது. ரமழான் கொண்டாட்டத்தை தீர்மானிப்பதற்கு தனியான கலண்டர் ஒன்று இல்லை. பிறையை கண்ட நாளிலிருந்தே நோன்மை ஆரம்பித்து நோன்பை முடிப்போம். எனினும் சஹ்ரானும் அவருடைய ஆதரவாளர்களும் வெளிநாட்டு தினத்துக்கு அமையவே கொண்டாடுவார்கள்.

சாதாரணமாக நாம் ரமழானைக் கொண்டாடும்போது அதற்கு முதல்நாளே அவர்கள் கொண்டாடுவார்கள். அவருடைய பிரசாரம் மாணவர்களை இலக்கு வைத்ததாகவே இருந்தது. பிழையான பிரசாரங்களை அவர்களுக்கு வழங்கி னர்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து எழுந்து நிற்கக்கூடாது என போதனை வழங்கினார். இது தொடர்பில் பாடசாலைகளிலிருந்து முறைப்பாடு கிடைத்து ஆராய்ந்தபோது சஹ்ரானின் போதனைகளிலிருந்து என்று தெரிய வந்தது. 2010ம் ஆண்டு காலப் பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதனைத் தொடரும் அதேநேரம், முஸ்லிம் மாணவர்கள் தேசிய கீதத்துக்கு எழுந்துநின்று மதிப்பளிக்கத் தேவையில்லையென்றும் போதித்திருந்தார். 2010, 2011 ஆண்டு காலப் பகுதியில் இப் போதனைகள் செய்யப்பட்டன. சர்வதேச இஸ்லாமிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலமையாளர்களுக்கு எதிரான பேச்சுக்களை அவர் முன்வைத்திருந்தார்.

ஜம்இயத்துல் உலமாவின் காத்தான்குடி கிளை இவரை நட்பான கலந்துரையா டலுக்கு அழைத்திருந்தது. எமது நிறுவனத்தில் நடத்தப்பட்ட கலந்துரை யாடல்கள் சிலவற்றில் இவர் கலந்துகொண்டாலும் அது பலனளிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் சஹ்ரான் ஜப்பான் சென்றிருந்தார். மூன்று மாதங்கள் அங்கிருந்திருந்தார்.

அவர் ஜப்பான் சென்றபோது இருந்த நிலைமை அவர் அங்கிருந்து வந்தபோது இருக்கவில்லை. பல மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. மீண்டும் நாட்டுக் குத் திரும்பி, தனது நிறுவனத்தின் ஊடான செயற்பாடுகளை முன்வைத்தனர். ஜப்பானில் உருது மொழியில் போதனை செய்ததாக கூறினார்.

ஆனால் இது பொய் என்பது நன்றாகவே தெரியும். ஆனால் அவர் பாரியதொரு பொய்யைக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவருடைய நிறுவுனத்தில் இருந்தவர்கள் முரண்பட்டுக்கொண்டதால் அவர் ஆரம்பித்த நிறுவனத்திலி ருந்து 2016ஆம் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே தேசிய தௌஹீத் ஜம்ஆத் அமைப்பை உருவாக்கினார்.

 பல்வேறு தௌஹீத் ஜம்ஆத் அமைப்புக்கள் பல இருக்கின்றபோதும், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்ஆத் மற்றும் தேசிய தௌஹீத் ஜம்ஆத் ஆகிய இரு அமைப் புக்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்களுடைய போதனைகள் தவறா னவையாக இருந்தன.

அத்துடன் அவர் தௌஹீத் என்பதன் அர்த்தத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டிருந்தார். யார் ஒருவர் ஒரு கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர் தௌஹீத் என்பதே அர்த்தமாகும். அவர் தனது தௌஹீத் செயற்பாட்டை ஆரம்பித்தபோதும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

2015ஆம் ஆண்டு மீரா பாலிகா வித்தியாலயத்தில் நிகழ்வொன்று நடைபெற் றது. இந்த நிகழ்வு ஆசிரியர்களாலும் அபிவிருத்தி சபையினாலும் ஏற்பாடு செய்யப்பட்டது. தரம் 4,5 மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், பாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டனர்.

இதன்போது சஹ்ரானும் அவருடைய சகாக்களும் இந்த நிகழ்வு இஸ்லாத் துக்கு எதிரானது என பிரசாரங்கள் செய்யத் தொடங்கியதுடன், துண்டுப் பிர சுரங்களையும் விநியோகித்தனர். இதனால் அதிருப்தியடைந்த குறித்த பாட சாலையின் அதிபர் எமது அமைப்பில் முறைப்பாடு செய்தார். இது குறித்து கலந்துரையாடலுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இதற்கு அவர் வரவிரும்பவில்லை.

 கேள்வி : -இக்காலத்தில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்ஆத் இருந்ததா? 

 பதில் :- ஆம். அந்த அமைப்புத் தொடர்பிலும் நாம் எதிராக இருந்தோம்.

கேள்வி :-ஏனைய தௌஹீத் ஜம்ஆத்களும் உள்ளனவா? 

பதில் : ஆம் நான் குறிப்பிட்ட இரண்டு தௌஹீத் அமைப்புக்களை விட ஏனையவை இதுவரை பயங்கரவாத செயற்பாட்டை அவர்கள் காண்பிக்க வில்லை. மேலும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது குறித்த பாடசாலை யின் ஆசிரியரிடம் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கோரினோம்.

பாடசாலையின் செயற்பாட்டை குழப்புவது மாத்திரமன்றி பாடசாலை மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களை துன்புறுத்துவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் பாடசாலை அபிவிருத்தி சபையினால் துண் டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வு சஹரானினால் மோசமாக விமர்சிக்கப்படுவது ஆரோக்கியமா னது இல்லையென அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த பாட சாலை அதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகளையும் விமர்சித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்பின்னர் மற்றுமொரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது, தௌஹீத் அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரா எனக் கேட்டு பாடசாலை ஆசிரியர் சங்கத்தினரால் அத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.

கேள்வி : பொலிஸ் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது? 

பதில் : இரு தரப்பினரையும் அழைத்து சமாதானத்தை பேணுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிபர் இதனைக் கூறினார். சஹரான் வந்தாரா என்பது எனக்குத் தெரியாது. அதன் பின்னர் சஹரானின் செயற்பாடுகள் மோசமடைந்ததுடன், அவர் ஜம்இயத்துல் உலமா உறுப்பினர்களை விமர்சிக்கத் தொடங்கினார்.

அவரை திருத்த முயற்சித்தமையால் சஹரான் அவர்களை விமர்சிக்கத் தொடங்கினார். கலாசார நிலையத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் அவர் ஜனநாயகம் பற்றி உரையாற்றியிருந்தார். ஜனநாயகம் இஸ்லாத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதது, நாட்டின் இறைமை தொடர்பில் கேள்வியெழுப்பியதுடன், தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார்.

அக் கூட்டத்தை பாதூப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அவ தானித்திருப்பார்கள் என நாம் எண்ணியிருந்தோம். அவருடைய உரை ஒலிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜம்யத்துல் உலமா அறிக்கை யொன்றை வெளியிட்டதுடன், ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைக்கு அப்பால்பட்டது என 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

அதன் பின்னர் சஹரானின் பேச்சின் பின்னர், ஜம்இயத்துல் உறுப்பினர்கள் கூட கூட்டமொன்றை கூட்டி, சஹரானினால் மேற்கொள்ளப்பட்ட உரை இஸ் லாமத்துடன் தொடர்புபட்டது அல்லது என விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுத்தனர். எனினும், சஹரானின் இரண்டு சகாக்கள் இந்தக் கூட்டத்தில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு குழப்பினர். இவ்வாறு குழப்பிய இருவ ரும் தற்கொலை குண்டுதாரிகளாகும்.

கேள்வி : யார் அந்த இரு நபர்கள்? 

பதில் : ஒருவர் நியாஸ். இவர் சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்கு தலை நடத்தியவர். மற்றையவர் ஆசாத், சியோன் தேவாலயத்தில் தற் கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர். கூட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் இது முடிவுக்கு வந்தது.

இச் சம்பவம் இடம்பெற்ற பின்னரே இந்த இருநபர்களும் தற்கொலைக் குண்டுத்தாரிகள் எனத் தெரிந்துகொண்டோம். இச் சம்பவங்களின் பின்னர் 2017 மார்ச் 10ஆம் திகதி சஹரான், வேறு கொள்கையைக் கொண்டவர்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தார். சுபி தரப்பினருக்கு எதிராக அமைந்தது.

அவர்களை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைத்தார். குறிப்பிட்ட சம்ப வம் பாரதூரமானதாகும். சுபி சமூகத்தினர் இருக்கும் இடத்துக்கு மிகவும் அரு கிலேயே கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். கல் வீச்சு நடத்தும் தூரமாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் பட்டாசு கொழுத்தப்பட்டதாகத் தெரிந்துகொண்டேன். இக்கல வரத்தில் சஹரானின் ஆதரவாளர்கள் கத்திகள், வாள்கள் மற்றும் கற்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்ற போதும், சஹரானின் தரப்பினர் எவரும் வைத்தியசாலைக்குச் செல்லவோ சிகிச்சை பெறவோ இல்லை.

கேள்வி : குறித்த கூட்டத்தில் எத்தனைபேர் இருந்திருப்பார்கள்? 

பதில் : நூற்றுக்கும் அதிகமான சஹரானின் ஆதரவாளர்கள் இருந்திருப்பார் கள். அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கத்திகள் மற்றும் வாள்கள் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் இருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டனர். இதில் சஹரான் கைதுசெய்யப்படவில்லை.

கேள்வி : இதிலிருந்து என்ன கூற வருகின்றீர்கள்? 

பதில் : ஏன் இருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டனர் என்பது தெரியாது. பின்னர் மோசமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் கள் தடுத்துவைக்கப்பட்டதுடன், ஜுன் 30ஆம் திகதி ஆகும்போது 9ற்கும் அதிக மான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சஹரான் மற்றும் அவருடைய சகோதரர் ரில்வான தலைமறைவாகியிருந் தனர். இவர்கள் இருவருக்கும் திறந்த பிணை வழங்கப்பட்டது. ஏனைய சந்தேக நபர்கள் எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கேள்வி : வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லையா? 

பதில் : இல்லை, வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்கள் பிணையில் இருந்தனர். அதன் பின்னர் சஹரான் தலைமறைவாகியதுடன், காத்தான்குடி மக்கள் அவரைக் காணவில்லை. சாதாரண கேள்வியொன்று எழுந்தது, 2017ஆம் ஆண்டில் சஹரானும் அவருடைய ஆதவாளர்களும் வாள் கள், மற்றும் கத்திகளுடனும் இருந்தவர்கள் எப்படி இந்தளவு பாரிய ஆயுதங் களைப் பெற்றார்கள் என்பதேயாகும்.

சஹரானின் நிதி நிலைமை மிகவும் மோசமாகவிருந்தது. ஒன்றரை வருடங் களில் எப்படி அவர் இந்தளவு நிதியைப் பெற்று பலமானவரானார். இச் சந்தர்ப்பங்களின் பின்னர் பின்னணியில் அவர் இருப்பதாக அறிந்தோம். எனி னும், பொதுமக்கள் அவரைப் பகிரங்கமாகக் காணவில்லை.

கேள்வி : அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்கவர வில்லையா? அவர்கள் எங்கே இருந்தார்கள்? 

பதில் : அதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் எனினும், எனக்குத் தெரியாது, அவர் கள் அங்குதான் இருந்தார்கள்.

கேள்வி : அவருடைய ஆதவாளர்கள் நூறுக்கும் குறைவானவர்கள் என் பதை எப்படிக் கூறுகின்றீர்கள்? 

பதில் : அந்த கூட்டத்தில் மிகவும் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள். பொதுவாக அரசியல் கூட்டமாக இருந்தாலும் வீதியில் செல்பவர்கள் என பலரும் நின்று பார்ப்பார்கள். இவ்வாறான நிலையில் அவருடைய கூட்டத்தில் எத்தனை பேர் அவருடைய ஆதரவாளர்கள் என்பது தெரியாது. அத்துடன் இந்த கூட்டன நகருக்கு முக அருகையில் நடந்ததால் சாதாரணமாக அனைவரும் வருவார்கள் தானே.

கேள்வி : பொதுவாக அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை பேர் எனக் கூற முடியாது? 

பதில் : இல்லை சரியாகக் கூறமுடியாது. எனினும், வெறுப்பவர்களே அதிக மாகவிருந்தனர். சஹரான் தொடர்பான சரியான விம்பமொன்றைக் கொடுக் கவே வந்துள்ளேன். நாட்டை விரும்பும் சட்டத்தரணி என்ற நிலையில் முழு மையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 66 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சனநெருக்கடி நிறைந்த பகுதி யில் கூட்டம் நடத்தப்பட்டமையால் அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்பதை சரியாகக் கூறமுடியாது.

கேள்வி : ஆயிரக்கணக்கானவர்கள் அவரைத் தொடர்பவர்களாக இருக் கின்றனரா? 

பதில் : குறிப்பிட்ட சம்பவத்தில் தந்தை, இரண்டு சகோதரர்கள், நண்பர்கள் என மிகவும் குறைவானவர்களே பங்கெடுத்திருந்தனர். காத்தான்குடி மக்கள் விழிப்புணர்வுடன் இருந்ததுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்களை வழங்கியிருந்தனர். கலாசார நிலையத்தில் நடைபெற்ற பேச்சு தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியும்.

கேள்வி : வேறு யாராவது இது தொடர்பிலானவர்கள் இருக்கின்றார்களா? 

பதில் : அப்படியானவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணவில்லை. நாம் விழிப்புணர்வுடன் இருக்கின்றோம்.

கேள்வி : சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் காத்தான் குடியைச் சேர்ந்தவர்களா? 

பதில் : மனைவி தவிர ஏனையவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். மனைவி குருநாகலை சேர்ந்தவர்.

கேள்வி : காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் என்ன நிலைப் பாட்டில் இருந்தனர்? 

பதில் : பிரசாரங்களை ஆரம்பித்தபோது எமது சம்மேளனம் காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினோம். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத் தும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாம் தெரியப்படுத்தினோம். 

கேள்வி : திகன சம்பவத்தின் பின்னர் அவருடைய உரைகளைக் கேட்டுள் ளீர்களா? 

பதில் : அப்போது கேட்கவில்லை. பொதுவாக நான் அவரது உரைகளை கேட் பதில்லை. எனினும் குண்டுத் தாக்குதலின் பின்னர் கேட்டுள்ளேன். 

கேள்வி : ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப் பட்டமை தொடர்பில் உடனேயே தெரியுமா? 

பதில் : இல்லை, உடனடியாகத் தெரியாது, குண்டுத் தாக்குதல்களின் பின்னரே அதனைத் தெரிந்துகொண்டோம்.

கேள்வி : நாம் இலங்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் உல கத்தில் நாங்களே பெரும்பான்மையானவர்கள் என ஹிஸ்புல்லா கூறு கின்றார். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில் : இல்லை. இக் கருத்துடன் நான் இணங்கவில்லை. ஏன் இவ்வாறான சூழலில் அவர் இப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய கருத்து நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும். இலங்கை குறிப்பிட்ட சமூகம் ஒன்றைச் சார்ந்தது இல்லை.

இலங்கையின் சட்டத்தை மதிக்கும் எல்லா சமூகத்தினரையும் சார்ந்ததாகும். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

கேள்வி : ஷரியா பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பற்றிய விடயம் உள்ளது. 

பதில் : ஷரியா பல்கலைக்கழகமாயின் அதனை மானியங்கள் ஆணைக் குழுவே அனுமதி வழங்க வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு விசேட சட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில ஷரியா சட்டங்களை நாம் பின்பற்று கின்றோம். இதனைவிட நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்.

கேள்வி : இலங்கையில் இரண்டு அரசகரும மொழிகள் இருக்கும் நிலையில் வீதிகளில் சில அரபு மொழியில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது தேவை எனக் கருதுகின்றீர்களா? 

பதில் : அரபு ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாகும். வரலாற்று ரீதியான மொழி என்பதால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரபு மொழியைக் கற்றுக் கொள்ளாமல் குர்ஆனை புரிந்துகொள்ள முடியும்.

கேள்வி : அரபு மயமாக்கல் எப்படி ஆரம்பமானது? 

பதில் : சவுதி அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்ட விடயமாகும். காத்தான்குடியின் பிரதிநிதி ஹிஸ்புல்லாவாகும். அவருடைய காலப் பகுதியிலேயே இவை நடைபெற்றன.

கேள்வி : அரபுமயமாக்கல் பின்னணில் இவர் இருப்பதாகக் கூறமுலாம். 

பதில் : 20 வருடங்கக்கு மேலாக அவர் அரசியலில் உள்ளார். அவரடைய காலப் பகுதியில் இவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி : அரபுமயமாக்கல் அடிப்படைவாதத்துக்கு வழியை ஏற்படுத்தியி ருக்குமா எனக் கருதுகின்றீர்களா? 

பதில் : நான் அவ்வாறு கருதவில்லை. இச் சம்பவம் முஸ்லிம் சமூகத்துக் குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியளார்களுடன் முஸ்லிம்கள் சிறந்த நட்புறவைப் பேணிவந்திருப்பதுடன், நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த பங்க ளிப்பைச் செலுத்தியுள்ளனர்.

காத்தான்குடி சகவாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்தச் சம்பவம் இஸ்லாத்துடன் தொடர்புபட்டது அல்லது. இஸ்லாம் பிழையாக வழிநடத் தப்பட்டுள்ளது. அடிப்படைவாதம் இஸ்லாத்துக்குள் புகுத்தப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர் நாம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம்.

சம்பவங்களால் முஸ்லிம் வர்த்தகர்கள் முடக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கார ணங்களுக்காக அவர்கள் வேறிடங்களுக்குச் சென்று வர்த்தகம் செய்ய முடி யாதுள்ளது. வர்த்தகத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களிலிருந்து வெளியேறுமாறு கட்டட உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு ஆடை தொடர்பான பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர்.