பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.! - THAMILKINGDOM பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.! - THAMILKINGDOM
 • Latest News

  பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.!

  பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல் கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதைப் போன்று, மாகாணசபைத் தேர்தல் தாமத மடைவதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமே தவிர அதிகாரிகள் இல்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றம், அமைச்சரவை ஆகியன இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தற்போதுள்ள நிலைமை யின் அடிப்படையில், மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தேர் தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

  ஜனாதிபதி தேர்தலானது, நவம்பர் மாதத்தின் இறுதி வாரங்களில் அல்லது டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் நடாத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  மாகாண சபை தேர்தலை முதலில் நடத்தினால் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதி ப்பு ஏற்படும் என சிலர் கருத்துக்களை முன்வைத்தாலும் , அவ்வாறு எந்த வொரு தடைகளும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top