Breaking News

அரையிறுதிக்குத் தகுதிபெற்றது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அவுஸ்திரேலியா அரை யிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 64 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அவுஸ்தி ரேலியா இந்த சிறப்பை பெற்றுள்ளது. வரலா ற்று முக்கியத்துவம் வாய்ந்த லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தா டிய அவுஸ்திரேலியா சார்பாக, அணித் தலைவர் ஏரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஜோடி முதல் விக்கெட்டில் 123 ஓட்டங்களை பகிர்ந்தது. இவ்வருட உலகக்கிண்ணத்தின் லீக் போட்டிகளில் இவர்கள் இருவரும் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்த மூன்றாவது சந்தர்ப்பமாக இது பதிவானதுடன், டேவிட் ​வோர்னர் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவருக்கே உரிய பாணியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஏரோன் பின்ச் 11 பவுன்டரிகள் 2 சிக்சர்களுடன் சதத்தை எட்டினார். மத்தியவரிசையில் 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட அவுஸ்திரேலியா ஓட்டங்களை பெறுவதில் சற்றுத் தடுமாறியது.

முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அலெக்ஸ் கெரே ஆகியோர் தலா 38 ஓட்டங்களைப் பெற்றனர். அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களைப் பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து Jason Behrendorff வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் ஓட்டமின்றி ஆட்டமிழக்க ஜோ ரூட் 8 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்ற மளித்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 115 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 89 ஓட் டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார். எனினும் மொயின் அலி, ஜொஷ் பட்லர், ஆதில் ரஷீட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரால் 30 ஓட்டங்களை கடக்க முடியாமல் போக, இங்கிலாந்தின் நிலை பரிதாபகரமானது.

இங்கிலாந்து 44.4 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. Jason Behrendorff 5 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட் களையும் வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இடக்கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர் 9 விக்கெட்களைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1992ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அவுஸ்தி ரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.