Breaking News

இலங்கையில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடா்வதினால் ஐ.நா. கவலை

இலங்கையில் வெறுப்புப்பேச்சு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதி விட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், வெறுப்புப்பேச்சின் தன்மை குறித் தும், வன்செயல்களைத் தூண்டிவிடுவதில் அதற்கிருக்கும் ஆற்றல் குறித்தும் பொலிஸார் கூடுதலான அளவுக்கு விழிப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டும் என ஐ.நா எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'இலங்கையர்கள் பெருமையாகப் பேசிக்கொள்கிற சகிப்புத்தன்மை, சக லரையும் அரவணைக்கும் போக்கு மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பண் புகள் மீதான தாக்குதலே வெறுப்புப் பேச்சு என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும்.

அது சமூக ஒருங்கிணைவையும், பொதுவான பண்புகளையும் மலினப் படுத்துவதுடன் சமாதானம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் காணப் பட்ட முன்னேற்றங்களை மட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது' என்றும் குறிப்பிட்டார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட முதன்முதல் இணையத்தளத்தின் மூலமான பொது முறைப்பாடு முகாமைத்துவ முறை மையை ஆரம்பித்தவைக்கும் வைபவத்தில் இன்று கருத்துரைக்கையில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.