Breaking News

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

உள்நாட்டுச் செய்திகள் 
  • பெருந்தோட்டங்களில் காணப்ப டும் அனைத்து வைத்தியசாலை களையும் பொறுப்பேற்க அரசாங் கம் தீர்மானித்துள்ளது. 
  • குருணாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி யினால் தாக்கல் செய்யப்பட் டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 6ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மா னித்துள்ளது. 
  • கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் தொடர்பில் திரு கோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித் துள்ளது. 
  • தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட் சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் திணைக் களம் தெரிவித்துள்ளது. 
  • அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 
  • ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப் பீடு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
  • ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வௌிநாட்டுச் செய்தி 

இந்தியாவின் சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்தி 

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.