Breaking News

நாணய விதிச் சட்­டத்தை திருத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது - மஹிந்த

அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நாணய விதி சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்டு வரு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. தேவைக்­கேற்ப கொண்டு வரு­வ­தாயின் பொரு­ளா­தார நிபு­ணர்­களின் பரிந்­து­ரை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டும்.

பொரு­ளா­தார ரீதியில் நாடு நெருக்­க­டிக்குள் உள்­ளா­கி­யுள்ள நிலையில் இவ்­வா­றான சட்டதிருத்­தங்கள் நிலை­மை­யினை மேலும் சிக்­க­லுக்­குள்­ளாக்கும் என எதிர்க்­கட்சி தலை வர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்துள் ளாா். 

பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் குழு அறை 7 இல் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்,

1949 ஆம் ஆண்டு 58ஆம் இலக்க நாணய விதிச் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வந்து மத்­திய வங்­கியின் நாணயச் சபை உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து திறை­சே­ரியின் செய­லா­ளரை நீக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு செய்­வதன் ஊடாக மத்­திய வங்கி தொடர்பில் திறை­சே­ரிக்கு இருக் கும் கட்­டுப்­பாடு இல்­லா­மல்­போ­வ­துடன் , சுயா­தீ­ன­மாக நாண­யத்தை மத்­திய வங்கி அச்­சி­டு­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டு­விடும்.

அது மாத்­தி­ர­மன்றி திறை­சே­ரியின் செய­லாளர், ஜனா­தி­ப­தி­யி­னா­லேயே மத்­திய வங்­கியின் நாணய சபைக்கு நிய­மிக்­கப்­ப­டு­கிறார். எனினும், திருத்­தத்தின் ஊடாக அதனை ஆணைக்­கு­ழு­விடம் கைய­ளிப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான முறை­யற்ற செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. ஏற்­க­னவே நாடு பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் நிலையில், நாணய நிதிச்­சட்­டத்தில் அர­சியல் தேவை­க­ளுக்­காக திருத்­தங்­களை மேற்­கொண்டால் தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டிகள் மேலும் தீவி­ர­ம­டையும் என்றார்.

எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன குறிப்­பி­டு­கையில், நாணய விதிச் சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்டு வரு­வ­தற்கு ஜனா­தி­பதி எதிர்ப்புத் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் சமர்ப்­பித்­துள்ள அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில், பொரு­ளா­தார நிபு­ணர்கள் மற்றும் கல்­வி­மான்கள் அடங்­கிய குழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய சட்­டத்தில் திருத்தம் செய்­யப்­பட வேண்டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 18ஆம் திகதி இந்தச் சட்­டத்­தி­ருத்தம் நிதி தொடர்­பான துறைசார் மேற்­பார்வைக் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. நாட்டின் நிதி நிலை­மையில் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடிய இந்த திருத்தம் சரி­யான முறையில் மீண்டும் சரி­செய்­யப்­ப­டா­விட்டால் குழு­நி­லையில் அதனை எதிர்க்க வேண்டி ஏற்­படும் மத்­திய வங்கி நாட்டின் நாணய விட­யத்­தையும், திறை­சேரி நிதி விட­யத்­தையும் கையா­ளு­கின்­றன.

இருந்­த­போதும் மத்­திய வங்­கிக்கும், திறை­சே­ரிக்கும் இடையில் உள்­ளகத் தொடர்­புகள் இருக்­கின்­றன. இதன் அடிப்­ப­டை­யி­லேயே திறை­சே­ரியின் செய­லாளர் மத்­திய வங்­கியின் நாணயச் சபையின் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். எனினும், நாணய விதிச் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வந்து இதனை மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள்.

இதனால் மத்­திய வங்கி மீது நிதி­ய­மைச்சு கொண்­டி­ருக்கும் கட்­டுப்­பாடு கைவி­டப்­படும். இதனால் மத்­திய வங்கி சுயா­தீ­ன­மாகச் செயற்படுவதற்கான சூழல் ஏற்படும் அது மாத்திரமன்றி, மத்திய வங்கி ஏனைய வர்த்தக வங்கிகளைப் போன்று அரசாங்கத்திடமிருந்தே வட்டியைப் பெற்று செயற்படக்கூடிய சூழல் ஏற்படலாம்.

இது நாட்டில் மேலும் 2015ம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி களை போன்று அரச ஆதரவுடன் மோசடிகள் இடம் பெறுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்குமெனத் தெரிவித்துள்ளாா்.