Breaking News

Blue Mountain நிறுவனம் பாரிய நிதி மோசடி.! (காணொளி)

சொத்துக்களை விற்பனை செய்யும் போர்வையில் Blue Mountain நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் கொழும்பு நகரில் நிர்மாணிக்கத் தயாராகியுள்ள 7 நட் சத்திர தொடர்மாடி குடியிருப்பின் ஊடாக நடைபெற்ற கொடுக்கல் வாங் கல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த 7 நட்சத்திர தொடர்மாடி குடியிருப்பிற்கு Akiliyon என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை Blue Mountain நிறுவனம் ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், இரண்டு பிரிவுகளில் 50 மாடிகளைக் கொண்ட 616 குடியிருப்புகளுடனான பாரிய திட்டம் இதுவென குறிப்பிடப்பட்டிருந்தது.

Helicopter ஒன்றை தரையிறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் இந்த குடியிருப்புத் திட்டத்தை, ஆசியாவில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டமாகக் காண்பித்தனர்.

சொகுசு தொடர்மாடி திட்டம் தொடர்பிலான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதி செய்யும் வகையில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் கட்டு மான நிறுவனமொன்றுடன் Blue Mountain நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத் திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டு தற்போது பல மாதங்கள் கடந்துள்ளன. இந்த தொடர்மாடி குடியிருப்பை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து சில கட்டங்களின் கீழ் Blue Mountain நிறுவனம் நிதி அறவிட்டிருந்ததுடன், வீட்டின் பெறுமதியின் 50 வீதத்திற்கும் அதிகமான பணத்தை பெரும்பாலானவர்கள் செலுத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு பில்லியன் ரூபாவை கொள்வனவாளர்களிடம் இருந்து அற விட்டுள்ளனர். Akiliyon திட்டத்திற்காக நான்கு வங்கிகளிடம் இருந்து கடன் பெறப்பட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், பொறுப்புக்கூற வேண்டிய எந்தவொரு தரப்பினரும் தமக்கான பதிலை இதுவரையில் வழங்கவில்லை என கொள்வனவாளர்கள் கூறுகின் றனர். இவ்வாறு பல பகுதிகளில் காணிகளை விற்பனை செய்யும் போது, Blue Mountain நிறுவனம் பாரிய நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை வங்கிகளில் அடகு வைத்து கடனைப்பெற்று, மக்களுக்கு விற் பனை செய்யும் செயற்பாட்டை இவர்கள் பல சந்தர்ப்பங்களில் முன்னெடுத் துள்ளனர். இவ்வாறு மோசடியாக விற்பனை செய்திருந்த யக்கல பிரதேசத் திலுள்ள காணியை ஏலமிடுவதற்கு வணிக வங்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

சொத்தொன்றை அடகு வைக்கும் போது, அதன் பெறுமதியின் 75 வீதத்தையே சாதாரணமாக வங்கியொன்று கடனாக வழங்கும். அவ்வாறு எனின், யக்கல சொத்து தொடர்பில் வங்கி பின்பற்றிய நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்தி, ஏனைய சொத்துக்களுக்கான வங்கிகளின் கடனை செலுத்தி எஞ்சிய பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியாதா?

சொத்துக்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து உரிய விதிமுறை யொன்று இல்லாத போதிலும், வங்கிகளில் இருந்து வழங்கப்படும் கடன் தொடர்பில் உரிமம் பெற்ற வணிக வங்கி மத்திய வங்கியின் ஒழுங்கு விதி முறைக்குள் உள்ளடங்குகின்றது.

அவ்வாறு எனின், Blue Mountain நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, ஏதேனும் நிவாரணத்தை வழங்குவதற்கான தலையீட்டை மேற்கொள்வதற்கான இயலுமை மத்திய வங்கிக்கு இல்லையா?