Breaking News

ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவு மக்களுடன் சந்திப்பு.!

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

ஏறக்குறைய ஒரு மணித்தியாலத் திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் குறித்த குழுவினால் கேட் டறியப்பட்டன.

கலந்துரையாடல் தொடர்பில் கேப் பாப்புலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

நாம் தொடர்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எம்மிடம் கேட்டறிந் தனர் மேலும் எமது பிரச்சினைக்கு அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி எமக் குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்பதாக கூறிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.