Breaking News

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடா்பாக -விக்கி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கேள்வி பதில் விபரம் வருமாறு,

கேள்வி: உங்கள் தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இணைப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விட் டதாக அறிகிறோம். இதுஉண்மையா? 

பதில்: தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்தகருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண் டும் என்பதில் நான் குறியாக இருக்கின்றேன். 

அதனால் தான் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்து வெற்றிகரமாக “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்திய கட்சிகளையும், அரசாங்கத்திற்கு எமது அரசியல் முன்மொழிவுகளை எம்முடன் இணைந்து கையளித்தவர்களையும் ஒன்று பட்டு செயலாற்றுமாறு வலியுறுத்தி வந்தேன்.

வடக்கு கிழக்கில் இன்று ஏராளமான தமிழ், முஸ்லிம், சிங்களகட்சிகள் செயற் பட்டு வருகின்றன. எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதி காரமும் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனப் படுகொலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு போதுமானதில்லை.

எனினும் இவற்றுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உள் நாட்டிலும் சர்வதேசரீதியிலும் மேற்கொள்வதற்கு எமது ஒன்றுபட்ட பலம் அவசியமானதாக இருக்கின்றது. மறுபுறத்தில், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மாகாண சபை அதிகாரமும் தவறானவர்கள் கைகளுக்கு செல்கின்றபோது அவற்றை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாரிய ஆபத்தும் இருக்கின்றது.

இதனால் தான் ஒரேசிந்தனை மற்றும் ஒரே கருத்துள்ள தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல்களில் பலமான ஒருஅணியாக போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தேன்.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சி ரீதியாக உடைக்கும் வகையில் நாங்கள் செயற்படப்போவதில்லை என தெரிவித்திருந்தேன். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே நான் எதிர்பார்க்கும்,

இந்த கொள்கை ரீதியான ஒத்திசைவு அதிகம் இருந்து வந்தாலும் கடந்த காலங்களில் “எழுகதமிழ்” கூட்டங்களை நடத்தியமை அரசியல் யாப்பு முன் யோசனைகளை அரசாங்கத்திற்கு கையளித்தமை போன்ற நிகழ்வுகளை ஒன்றுசேர்ந்து வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும் இந்தக்கட்சிகள் தேர்தல் களிலும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என விரும்பினேன்.

இந்த அடிப்படையில் தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இந்த கூட்டணியில் இருக்கவேண்டும் என பெரிதும் விரும்பினேன். ஆனால்,தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் EPRLF க்கும் இடையே கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்பட்ட முரண் பாடுகள், இந்தகட்சிகள் இரண்டும் ஒன்றாக என்னுடன் இணைந்து செயற் படுவதற்கு எதிரான பிரதான சவால்களாக இருந்துவருகின்றன.

அத்துடன் எமதுதமிழ் மக்கள் கூட்டணி இந்தியாவின் சொல்லைக் கேட்டு செயற்படுவதாகவும் இந்தியா தம்மை இந்த கூட்டணிக்குள் இணைக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

இது முற்றிலும் தவறு. எனது அரசியலில் இதைசெய், இதைசெய்யாதே என்று இந்தியா இன்றுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தியதோ, ஆலோசனை சொன்னதோகிடையாது. எது சரி என்று நினைப்பதையே நான் இன்று வரை செய்து வந்துளேன். இனியும் செய்வேன்.

ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் விரும்பும் ஒருதீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு அவசியம் என் றும் அதனை இந்தியா செய்யும் என்றும் நான் நம்புகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தான் முக்கியம்.

எனது கட்சியின் அடையாளமோ, எனது பிம்பமோ எனக்கு முக்கிய மானவை அல்ல. அதனால் தான் ஏன் ஒரு கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி யும் மக்கள் அதனைத்தான் விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தியும் சில வாரங்களுக்கு முன்னர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.

இதில் பல விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். முக்கியமாக ஏனைய கட் சிகளை உள்வாங்கி ஒற்றுமையாக செயற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அகில இலங்கைதமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஒருகொள்கை அடிப்படையில் சரியான பாதையில் செல்வதற்கு ஒரு இறுக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கையை தயாரித்து நாம் செயற்பட வேண்டும் என நான் தெரிவித்துள்ளேன்.

கஜேந்திரகுமாரை நேரடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் கேட்டிருந்தேன். இந்தியா எம்மை அவர்களுடன் சேர வேண்டாம் என தெரிந் திருந்தால் நான் ஏன் சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்க முன் வர வேண்டும்? ஆனால் இன்று வரை கஜேந்திரகுமார் எனது கடிதத்துக்கு நேரடி யாக பதில் அளிக்கவில்லை.

ஆனால், பத்திரிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில் நான் அனுப்பியகடிதம் பற்றிக்குறிப்பிட்டு எனது யோசனைகளை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தி ருப்பதை பார்த்தேன். பின்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் “விக்னேஸ்வரன் ஐயாவுடன்” மட்டுமே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையும் என கஜேந்திரகுமார் தெரித்துள்ளார்.

பிரபாகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய தீர்க்கதரிசனமான முயற்சியில் இருந்து நாம் பாடங்களைக்கற்று எவ்வாறு தொடர்ந்து முன் நகர்ந்து செல்லவேண்டும் என்று கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன்.

இந்நிலையில், தான், பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் கொண்டு வருவதற்குத்தான் அனு சரணை வழங்குவதாகக் தெரிவித்து எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் நன்கு அறிமுகமான பேராசிரியர் முருகர் குணசிங்கம் முன்வந்தார்.

அதனை நான் ஏற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைப்பேசித்தீர்க்கும் ஒரு முயற்சியாக தமிழ் மக்கள் கூட்டணிக்கும் தமிழ் மக்கள் தேசியமுன்ன ணிக்கும் இடையில் ஒருசந்திப்பை ஏற்பாடுசெய்ய அவர் முயற்சித்தார்.

இச் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை நடைபெறுவதாக ஏற்பாடாகிருந்தது. எமக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கையீனங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க் கும் ஒரு சந்திப்பாகவே இது அமையவிருந்ததால் எந்த முன் நிபந்தனைகளும் எமக்கு இடையே இருக்கவில்லை.

ஆனால், EPRLF கட்சியை இந்த கூட்டணியில் இணைக்காது இருப்பதற்கு நான் சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கூறியே நண்பர் பேராசிரியர் முருகர் குணசிங்கம் தெரிவித்ததாகவும் அந்த அடிப்படையிலேயே சந்திப்புக்கு இணக் கம் தெரிவித்ததாகவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியை பேராசிரியர் முருகர் குணசிங்கம் கடந்த ஞாயிறுக்கிழமை சந்தித்த போது அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இது எனக்கு தெரிவிக்கப்பட்டது.

அப்படி எந்த ஒரு இணக்கத்தையும் நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்க வில்லை என்று விளக்கிய போது நடக்க ஏற்பாடாகிருந்த சந்திப்பு, ரத்துசெய்யப்பட்டது. இந்தவிடயத்தில் நான் யாரையும் குறை கூறவிரும்ப வில்லை.

நல்ல ஒரு நோக்கத்துக்காகவும் எமது மக்களின் நன்மைக்காகவுமே இந்த சந்திப்பு முயற்சி ஏற்பாடாகிருந்தது. ஆனால், தவறான அணுகு முறைகளி னால் இது சாத்தியமாகாமல் போயுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஏனைய கட்சிகளில் இருந்துவிலகி எமது கொள்கை களை ஏற்றுச் செயற்பட விரும்புபவர்களையும் இணைத்து செயற்படுவதே எமது நோக்கம்.

இந்த முயற்சியில் கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன்நிபந்தனை களையும் விதிக் காமல் எமது மக்களின் இன்றைய அவல நிலையைக் கவ னத்தில் கொண்டுதான் கட்சிகள் செயற்படவேண்டும். அதேவேளை, எதிர் காலத்தில் தவறுகள் விடுவதில்லை என்றும் தமிழ் மக்களின் அபிலாஷை களே எமது மூச்சு என்ற பிரக்ஞையின் அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை, அதேசமயம் இறுக்க மான ஒழுக்க விதிகளுடன் தான் நாம் செயற்பட வேண் டும்.

இந்த முயற்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. ஆனால் அதே சம யம் முன்னேற்றமும் காணப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.