பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி.! - THAMILKINGDOM பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி.! - THAMILKINGDOM
 • Latest News

  பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி.!

  டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாள ருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

  இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள் ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரி கையாளர் பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறு மாறு பதிவிட்டுள்ளார்.

  வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தை பிர யோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதை சுட்டிக் காட்டியிருந்த பெண் பத்திரிகையாளர் என்னால் 100 மீற்றர் கூட இவ்வாறான தொந்தரவுகள் இன்றி நடக்க முடியாதுள்ளதெனத் தெரிவித்துள்ளாா். 

  இதற்கு பதில் அளித்துள்ள கடற்படை அதிகாரி நீங்கள் இந்த நாட்டிற்கு உகந்த வர் இல்லை நீங்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறுங்கள் உங்கள் உண்மை நோக்கம் என்னவென கேள்வி எழுப்பியிருந்தார்.

  முன்னாள் கடற்படை அதிகாரியின் கருத்திற்கு பல ஊடக வியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு முன்னாள் கடற்படை அதிகாரி.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top