உயிராக நினைத்த கிரிக்கெட் விளையாட்டே, உயிருக்கு உலையான சோகம்..! - THAMILKINGDOM உயிராக நினைத்த கிரிக்கெட் விளையாட்டே, உயிருக்கு உலையான சோகம்..! - THAMILKINGDOM
 • Latest News

  உயிராக நினைத்த கிரிக்கெட் விளையாட்டே, உயிருக்கு உலையான சோகம்..!

  இந்தியா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

  வீட்டில் இருப்பதை விட மைதானத் தில்தான் தன் அதிக நேரத்தை செல வழித்துள்ளார். அகமது, நேற்று அரசு சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான கிரிக்கெட் போட்டியில் உற்சா கத்துடன் கலந்துக் கொண்டார். அணி சார்பாக பேட்டிங் செய்ய களம் இறங் கினர் அகமது.

  அவருக்கு அதிவேகமாக பந்து வீசப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது பந்து பலமாக மோதியதால் நின்ற இடத்தில் இருந்தே மயங்கி கீழே விழுந்து விட்டார். இந்நிலையில், உடனடியாக மைதானத்தில் இருந்தவர்கள் அகமதை அருகில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

  அங்கு அகமத்தினை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

   இது குறித்து வைத்தியர் கூறுகையில்,

  ஷாட் பிட்ச் பந்தினை அகமது அடிக்க முயன்றபோது தற்செயலாக கழுத்தில் நேராக தாக்கியுள்ளது. உடனே சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்ட நிலை யிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளாா்.

  மேற்படி உயிரிழந்தவர், தலைக்கவசம் அணிந்திருந்தும் பந்து அதிவேகமாக வந்ததால் கடுமையாக தாக்கியுள்ளாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள் ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: உயிராக நினைத்த கிரிக்கெட் விளையாட்டே, உயிருக்கு உலையான சோகம்..! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top