நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் - THAMILKINGDOM நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் - THAMILKINGDOM

  • Latest News

    நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்

    கொரோனா வைரஸின் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படுகின்றன. 

    இந்த நடவடிக்கையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். 

    இதேவேளை பாடவாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. 

    சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மாணவர்களக்கு முககவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

    இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல் , இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

    பாடசாலைகளை ஆரம்பிக்கும் முதல் கட்டத்தின் கீழ், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்காக அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

    சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் தெரிவித்தார். 

    (அரசாங்க தகவல் திணைக்களம் )
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
    Scroll to Top