சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை! - THAMILKINGDOM சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை! - THAMILKINGDOM

 • Latest News

  சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை!

  சாத்தான்குளம் தந்தை-மகன் சிறைக் காவலில் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

  சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, சாத்தான்குளம் வழக்கில் உரிய விசாரணை நடைபெற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார். ''சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அனுமதி பெறப்படும்.

   காவல்துறையினருக்கு பொது மக்களுக்கு தொந்தரவு தரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றும் முதல்வர் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top