Breaking News

தமிழ் அகதிகள் ஓடிப்போனவர்கள் - கொச்சைப்படுத்தும் சுமந்திரன்(காணொளி)

புலம்பெயர்ந்தவர்கள்  ஓடிப்போனவர்கள் என
கொச்சைப்படுத்தியுள்ளார் சுமந்திரன். அவர்கள் தமது தஞ்ச கோரிக்கைக்காக பொய்களை சொல்லிவருவதாகவும் கூறியுள்ளார்.

தாயகத்தில் ஏற்பட்ட இனவழிப்பு , இராணுவ கெடுபிடிகள் காரணமாக தமது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக புலம்பெயர்ந்தவர்களை ஓடிப்போனவர்கள் எனக்கொச்சைப்படுத்துவதும் அவர்கள் புகலிட கோரிக்கைக்காக பொய்சொல்வதாக சொல்லுவதன் ஊடாக தனது அரச சேவகத்தை சுமந்திரன் மீண்டும் நிலைநாட்டியிருப்பதோடு புலம்பெயர் உறவுகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

அந்த புகலிட கோரிக்கையாளர் we are the tamils of Tamileelam என்ற வாசகத்தை பயன்படுத்தியிருப்பதாகவும் கடைசிவரை அதனை எந்த ஒரு சட்டத்தரணியும் அவ்வாறு எழுதமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கடந்தகாலங்களில் செய்த திருகுதாளங்களை வெளிப்படுத்தி அண்மையில் கொழும்பு ரெலிகிராபில் மனோன்மணி சதாசிவம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அது தொடர்பில் கேட்கப்பட்டபோதே சுமந்திரன் இவ்வாறு கொதித்துப்போயிருக்கிறார்.

அவர் எழுதிய கட்டுரையினை படிக்க அழுத்தவும் திரு.சுமந்திரன் ஏன் வெளியேற்றப்பட வேண்டும்? மனோன்மணி சதாசிவம்

அவர் எழுதிய கட்டுரை தொடர்பான குற்றச்சாட்டுபற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அவ்வாறான கட்டுரைகளை தான் படித்து பார்ப்பதில்லை நான் என்ன பையித்தியமா அவற்றுக்கு பதில்சொல்லமுடியாது எனச்சொன்ன அதே சுமந்திரன், அந்த கட்டுரை தொடர்பாக பேசியபோது அதுதொடர்பாக அதனை எழுதியவர் யார் என தேடியதாகவும் பின்னர் அவர்தொடர்பான விபரம் கிடைத்ததாகவும் அவர் இப்போது இலங்கையில் இல்லை என்றும் அவர் பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையில் இருப்பதாகவும் அவருக்கு இன்னமும் விசா கிடைக்கவில்லை என்ற விடயம் வரை அறிந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரது புகலிடக்கோரிக்கைக்காக அந்த கடிதம் வழங்குவதற்காக அவருக்கு அவரது சட்டத்தரணி எழுதிக்கொடுத்த கடிதமே அதுவென்று அதற்கான ஆதாரங்கள் தன்வசம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தன்னை பற்றி எழுதிய கட்டுரை ஒன்றுக்காக அதனை எழுதியவர் தொடர்பாக இவ்வளவு விடயங்களை அவரது புலனாய்வு முகவர்கள் மூலம் பெற்றிருக்கிறார் என்பதை அவர் தனது செவ்வியில் தெளிவாக விபரித்துள்ளார்..




இது தொடர்பான முன்னய செய்தி

சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)

சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)


விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை









ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி

சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)


முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்