Breaking News

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

பகுதி 1 - மு.ப. 09.30 - 10.30 

பகுதி 2 - 11.00 - 12.15 

இம்முறை விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதன்முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வருடத்திலிருந்து அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் கல்வி தகவல்கள் உட்சேர்க்கப்படும் போது இந்த குறியீடு முக்கியத்துவம் பெறும். எனவே பெற்றோர் அக்குறியீடு உள்ள பகுதியை வேறாக எடுத்து பெற்றோர் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 

இப்பபரீட்சைக்குத் தோற்றும் அனைத்து விண்ணப்பதாரிகளினதும் பரீட்சை அனுமதி அட்டை மற்றும் வரவு ஆவணம் என்பன உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டவணை மற்றும் வரவு ஆவணம் கிடைக்காத பாடசாலை அதிபர்கள் பரீீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது கொண்டு வருவது கட்டாயம் அல்ல. ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம் வழங்கப்படும் வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்