Breaking News

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நகரம்!

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நகரமாக பிரகடணப்படுத்தப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொரோனா பரவல் காரணமாக இவ்வாறு குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  

ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதனையடுத்து இவர்களை சிகிச்சை முகாம்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.  

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்த ஹட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை நேற்று முன்தினம் (25.10.2020) உறுதிப்படுத்தப்பட்டது.  

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு பீசீஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.  

பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.