வவுனியாவில் பயங்கரம் இரட்டைக் கொலைச்சம்பவம் - ஒருவர் படுகாயம்! - THAMILKINGDOM வவுனியாவில் பயங்கரம் இரட்டைக் கொலைச்சம்பவம் - ஒருவர் படுகாயம்! - THAMILKINGDOM
 • Latest News

  வவுனியாவில் பயங்கரம் இரட்டைக் கொலைச்சம்பவம் - ஒருவர் படுகாயம்!

  வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

  குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.  

  மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் நோயாளர் காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

  அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

  குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் 40 (4 பிள்ளைகளின் தந்தை) மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவர் மரணமடைந்ததாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

  சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வவுனியாவில் பயங்கரம் இரட்டைக் கொலைச்சம்பவம் - ஒருவர் படுகாயம்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top